Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 23, 2017

யார் சிவன்? ஈஷாவுக்கும் சிவனுக்கும் என்ன தொடர்பு?


மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகம் என்பது இன்றிலிருந்து 5000ம் வருடங்களுக்கு முந்தையது. அதாவது பார்ப்பனியப் படையெடுப்புக்கு முந்தையது. பார்ப்பனியப் படையெடுப்பு கிமு 1க்கும் கிபி 1க்கும் இடைப்பட்டதே. சிவன் தான் அந்த மக்கள் வழிபட்ட தெய்வம் என்பது ஆய்வாளர் ஜான் மார்சல் கருத்து.

பார்ப்பனிய இந்தியப் படையெடுப்புக்குப் பிறகு அது உருவாக்கியதே மும்மூர்த்தி கொள்கை. இந்த மும்மூர்த்திக் கொள்கைப்படி பிரம்மா படைப்பவராகவும், விஷ்ணு காப்பவராகவும், சிவன் அழிப்பவராகவும் முன்னிறுத்தப்பட்டனர். படைத்தல் காத்தல் போன்ற நல்ல வேலை அவர்களுக்கு. அழித்தல் மட்டும் சிவனுக்கு.

மொகஞ்சதாரோ, ஹரப்பா மக்கள் உருவாக்கிய அணையை உடைத்தே பார்ப்பனியம் அழித்தது என்பது ஆய்வு முடிவு. பார்ப்பனிய சம்பிரதாயங்கள் படி வருண பகவானைத் தடுக்ககூடாது என்பதையும் கவனத்தில் கொள்க.

வடநாட்டு சிவனை அழிப்பவராக மட்டுமே முன்னிறுத்திய பார்ப்பனிய அரசியலுக்கு எதிராக உருவானதே தென்னாட்டு சைவ மரபு. தென்னாடுடைய சிவனே போற்றி என்பதிலிருந்து வடநாட்டு சிவனோடு தென்னாட்டவருக்கு தொடர்பில்லை.

வடநாட்டு சிவனை யாரும் அங்கு தொட்டு வழிபடலாம். அதற்கு தீண்டாமை இல்லை என்று அர்த்தமல்ல. அங்கு சிவனே தீண்டப்படாதவர் தான். வடநாட்டு சிவனுக்கு அழித்தல் மட்டுமே வேலையாக பார்ப்பனியம் நிச்சயித்தது. ஆனால், தென்னாட்டு சிவன் ஐந்து வேலைகளைச் செய்வதாக நம்புவது சைவ மரபு.

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவையே அந்த ஐந்தொழில்.
இந்த ஐந்தை மையமாக வைத்தே சிதம்பரம் நடராஜர் உருவம் இருக்கும். அவர் தென் மேற்கே பார்த்து தான் ஆடுவார். ஏனெனில், பொதிகை மலைக்காற்றை சுவாசித்து ஆடுவதாக ஐதீகம்.

நடனத்தின் அரசனாக சிவனை பாவிப்பதும் தென்னாட்டில் மட்டுமே. தென்னாடு என்பது தமிழ்நாடு மட்டுமே. சக்கி வாசுதேவ் தமிழனோ, தென்னாட்டு சைவனோ அல்ல. வடநாட்டு சிவனை ருத்ரனாகப் பார்க்கும் தெலுங்கைப்  பூர்விகமாகக் கொண்ட கன்னடனே. அவன் சிவனைப் பற்றி புரிந்ததும் தவறே.

சிவன் வடக்கே கெட்டதை மட்டுமே அழிப்பவர். இவன் இங்கு நல்ல பலதையும் சிவன் பெயரைச் சொல்லி அழிப்பவனே. இங்குள்ள முருகன் வதம் செய்ய வேண்டியது சூரனை அல்ல. ஜக்கி வாசுதேவையே.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதை யார் எழுதினார்கள் என தெரியவில்லை.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.