February 28, 2017
ஆந்திரா: பாலத்தில் இருந்து விழுந்த பேருந்து
ஆந்திராவில் புவனேஸ்வரில் இருந்து ஐதராபாத் சென்று கொண்டிருந்த பேருந்து, விஜயவாடா பகுதியில் பாலத்தை தாண்டி ஆற்றில் விழுந்து விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் இதுவரை 6 பேர் மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 30-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு நந்திகாமா அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விஜயவாடாவின் முல்லப்பாடு பகுதியில் இன்று காலை 5.30 மணி அளவில் இந்த விபத்து நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓட்டுநரின் கவனக் குறைவால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.
ஆந்திரா: பாலத்தில் இருந்து விழுந்த பேருந்து
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 28, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 28, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.