Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 28, 2017

எங்க ஊரை அழிய விட்டிடுவோமா? நானும் தமிழச்சி தான்! டிடி ஆவேசம்!


தமிழகத்தில் விவசாயிகளின் சம்மதமின்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று விஜய் டிவி தொகுப்பாளினி கூறியுள்ளார்.

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயன்ற வருகிறது.

இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் இரவு பகலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 13வது நாளாக நெடுவாசல் கிராம மக்கள் போராடி வருகின்றனர்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவாக நடிகர்கள், அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விஜய் டிவி தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி தனது டிவிட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், “ஹைட்ரோ கார்பன் திட்டம் நிலத்தடி நீரைக் குறைத்துவிடும். விவசாய நிலங்களை வீணாக்கி, சுற்றியுள்ள பல கிராமத்தினரின் வாழ்வாதாரத்தைப் பாதித்துவிடும்.

அந்தப் பகுதியின் விவசாயிகள், மக்களின் சம்மதம் இன்றி இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் என் அப்பா பிறந்த பேராவூரணிக்கு அருகில் உள்ள தென்னங்குடியிலிருந்து வந்த நான், என் கிராம மக்களுக்காக துணை நிற்பேன் என்று கூறியுள்ளார்.

கிராம பாசத்தில் பதிவிட்ட டிடிக்கு பாராட்டு தெரிவித்துள்ள இளைஞர்கள், நெடுவாசலுக்கு நேரில் வந்து ஆதரவு தெரிவியுங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.