February 25, 2017
உசுப்பேற்றிய மாஃபா பாண்டியராஜன்.. ஒன்னுமில்லாமல் போன ஓ.பி.எஸ் பிரஸ் மீட்!
ஜெயலலிதாவின் பிறந்த நாளான நேற்று வரலாற்றையே திரும்பிப் பார்க்க வைக்கும் முடிவை அறிவிப்பார் என்று கூறியதன் பேரில் வரலாற்றையே ஏமாற்றியுள்ளார்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளான நேற்று ஆர்.கே. நகரில் முக்கிய அறிவிப்புகள் ஏதும் அறிவிக்காததால் அவரது ஆதரவாளர்களும், மக்களும் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை கொண்டாட ஓ.பன்னீர் செல்வம் அணியினர் ஏற்பாடு செய்திருந்தனர். முன்னதாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பன்னீர் செல்வத்தின் வீட்டில் முன்னாள் அமைச்சர் மாஃப பாண்டியராஜன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஆர்.கே. நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிறந்தநாள் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் வரலாற்றையே திரும்பி பார்க்கும் அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறியிருந்தார்.
இதனால் அவரது ஆதரவாளர்களும், பொதுமக்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். எனினும் சசி தரப்போ பன்னீர் என்ன குண்டை போட போகிறாரோ என்று பீதியில் இருந்தது.
இதைத் தொடர்ந்து ஆர்.கே.நகரில் ஜெயலலிதா பிறந்த நாளைக் கொண்டாடிய ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களா சந்தித்து, வழக்கம் போல் தர்மம் வெல்லும், சூது கவ்வும் உள்ளிட்ட தமிழ் பட டைட்டில்களையே கூறியிருந்தார்.
இதனால் தொண்டர்கள், பொதுமக்கள், ஊடக செய்தியாளர்கள் ஆகியோருக்கு ஏமாற்றமே விஞ்சியது.
உசுப்பேற்றிய மாஃபா பாண்டியராஜன்.. ஒன்னுமில்லாமல் போன ஓ.பி.எஸ் பிரஸ் மீட்!
Reviewed by மறத்தமிழன்
on
February 25, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 25, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.