February 5, 2017
கள்ளகாதலனுடன் சுற்றிய மனைவியின் தலையை வெட்டிய கணவன்
கள்ளக்காதலனுடன் சுற்றிய மனைவியின் தலையை கணவன் துண்டாக வெட்டி எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இக்னோரியா பகுதியில் உள்ள கார்லி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி நாராயண் சிங்(38). இவரது மனைவி சரிதா(28). சரிதா அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழகி வந்துள்ளார்.
இது நாளைடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையறிந்த நாராயண் தன் மனைவியை எச்சரித்துள்ளார். அதுமட்டுமின்றி, மனைவி மீது சந்தேகம் தீராத அவர், மனைவியை கண்காணிக்க உளவாளி ஒருவரை தயார் செய்துள்ளார்.
அவரும் அவ்வப்போது மனைவி சரிதா குறித்து தகவலை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி சரிதா அவரது கதலனுடன் ஊர் சுற்றியது போல் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாராயண் சிங் , சரிதாவின் தலையை துண்டாக வெட்டி கொலை செய்துவிட்டு, அருகே உள்ள காவல் நிலையத்திற்கு தலையை கொண்டு சென்று சரண் அடைந்தார்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், மனைவி சரிதாவின் கள்ளக்காதல் தெரியவந்ததையடுத்து நாராயண் இரண்டு முறை அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் சரிதா கேட்கவில்லை, இதனால் அவர் கொலை செய்துள்ளார் என்று கூறினர்.
மேலும் இது தொடர்பாக நாராயண் சிங்கிடம் விசாரணை நடத்திய பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளகாதலனுடன் சுற்றிய மனைவியின் தலையை வெட்டிய கணவன்
Reviewed by மறத்தமிழன்
on
February 05, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 05, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.