Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 15, 2017

செக்ஸ் வைத்துக்கொள்ள ஒருவர் என்னை கட்டாயப்படுத்தினால்...


செக்ஸ் வெச்சுக்கிட்டா என்ன தப்பு?” “இன்னைக்கு எல்லாரும்தானே செக்ஸ் வெச்சுகுறாங்க...” என்று ஒருவேளை நீங்கள் கேட்கலாம்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

உண்மை இதுதான்: எல்லா இளைஞர்களும் செக்ஸ் வைத்துக்கொள்வதில்லை.

இன்று, நிறைய இளைஞர்கள் செக்ஸ் வைத்துக்கொள்கிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் சொல்வதை நீங்கள் பார்த்திருக்கலாம். பள்ளிப்படிப்பை முடிப்பதற்குள், 3 இளைஞர்களில் 2 பேர் அடிக்கடி செக்ஸ் வைத்துக்கொள்கிறார்கள் என்று அமெரிக்காவில் செய்யப்பட்ட ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. அதே ஆராய்ச்சியில் இன்னொரு உண்மையும் மறைந்து இருக்கிறது. 3 இளைஞர்களில் ஒருவர் அப்படி செக்ஸ் வைத்துக்கொள்வதில்லை என்றும் தெரிகிறது.

சரி, அடிக்கடி செக்ஸ் வைத்துக்கொள்ளும் இளைஞர்கள் எப்படி உணருகிறார்கள்? அப்படிப்பட்ட இளைஞர்களுக்கு அதிக பாதிப்புகள் இருக்கிறது என்று சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். சில பாதிப்புகளை இப்போது பார்க்கலாம்.

வேதனை. கல்யாணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் இளைஞர்கள், பிறகு அதை நினைத்து வேதனையால் வாடுகிறார்கள்.

ஒரு அழகான வரைபடம் கால் மிதியாக பயன்படுத்தப்படுகிறது
கல்யாணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக்கொள்வது, ஒரு அழகான வரைபடத்தை கால் மிதியாக பயன்படுத்துவதுபோல் இருக்கிறது
சந்தேகம். “இந்த நபர் என்னோட மட்டும்தான் செக்ஸ் வெச்சுகுறாரா இல்ல நிறைய பேரோட இப்படி பழகுறாரா?” என்ற சந்தேகம் செக்ஸ் வைத்துக்கொள்ளும் ரெண்டு பேருக்குமே வருகிறது.

ஏமாற்றம். பொதுவாக, தங்களை நன்றாக கவனித்துக்கொள்ளும் ஆண்களையே பெண்கள் நேசிப்பார்கள். காகிதம் போல் கசக்கி போடும் ஆண்களை அல்ல. ஆண்களை பொருத்தவரை, தங்களுடைய ஆசைக்கு சட்டென இணங்கிவிடும் பெண்களிடம் ஆண்களுக்கு இருக்கும் ஈர்ப்பு போகப் போக குறைந்து விடுகிறது.

என்ன முடிவுக்கு வரலாம்: உங்கள் உடல் மதிப்புள்ளது, செக்ஸ் தொல்லைக்கு இணங்கி அதன் மதிப்பை இழந்துவிடாதீர்கள். செக்ஸ் தொல்லைகளை எதிர்த்து நிற்கும் சக்தி உங்களுக்கு இருக்கிறது என்பதை காட்டுங்கள். கல்யாணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக்கொள்வது தவறு என்ற கடவுளுடைய சட்டங்களுக்கு உங்களால் கீழ்ப்படிய முடியும் என்பதை நிரூபியுங்கள். ஒரு நாள் நீங்களும் கல்யாணம் செய்துகொள்ளலாம், உங்கள் துணையோடு எந்த குற்றவுணர்வோ கவலையோ பயமோ இல்லாமல் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம். அப்போது உங்கள் வாழ்க்கை தேனாய் தித்திக்கும்.—நீதிமொழிகள் 7:22, 23; 1 கொரிந்தியர் 7:3.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.