February 21, 2017
பாலியல் அடிமைகளாக தமிழ் பெண்கள்: இலங்கைக்கு எதிராக தமிழ் நாட்டில் போர்க்கொடி
\தமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருந்த இலங்கை படையினரை உடனடியாக கைது செய்து தண்டிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இந்திய அரசு இலக்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போதும், அதன் பின்னரான காலப்பகுதியிலும் தமிழ் பெண்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக இலங்கை படையினர் பயன்படுத்தியுள்ளார்கள் என்ற உண்மை தற்போது அம்பலமாகியுள்ளது.
இந்த கொடூர குற்றசெயற்பாடுகளில் ஈடுபட்ட இலங்கை படையினர் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். இதற்கு இந்திய அரசு இலக்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
தமிழ் பெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் இந்த கொடுமை இனப்படுகொலையை விட மோசமானது. எனவே தற்போதாவது சர்வதேச சமூகம் போர் குற்றங்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்க விரைந்து செயற்பட வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் அடிமைகளாக தமிழ் பெண்கள்: இலங்கைக்கு எதிராக தமிழ் நாட்டில் போர்க்கொடி
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 21, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 21, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.