Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 20, 2017

சசிகலா பற்றிய சினிமா: இந்தியாவே அலறப் போகிறது: பல ரகசியங்கள் உடைபடும்: வர்மா


இந்தி மற்றும் தெலுங்குத் திரையுலகில் முக்கியமான இயக்குநரான ராம்கோபால் வர்மா சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்.
வரலாற்று நிகழ்வுகளை மையமாக வைத்து படங்கள் எடுப்பவரான இவர் நேற்றிரவு தனது டிவிட்டர் பக்கத்தில் தனது புதிய படத்தின் டைட்டிலை பதிவு செய்திருப்பதாக கூறினார்.
செய்தி இதுவல்ல. அவர் வைத்திருக்கும் டைட்டில் தான் செய்தி. “சகிகலா” என்று பெயர் வைத்திருக்கும் அவர், ஒரு அரசியல்வாதியின் மிக நெருக்கமான மற்றும் அன்பான தோழமையின் கதை என்றும் கூறியிருந்தார்.
ஆனால் உண்மை நிலை வேறு சசிகலா, ஜெ. இருவர் மட்டுமே அறிந்த ஆனால் யாரும் அறியாத பல தகவல்கள் எனக்கு தெரியும்.
மக்களுக்கு புது வித ஒரு அனுபவம் கிடைக்கும் இந்தப் படத்தில். எந்த வித அச்சுறுத்தலும் இந்தப் படத்தை தடை செய்து விட முடியாது.என்கிறார்.
மேலும் அவர் நான் ஜெயலலிதாவின் மேல் மரியாதை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.எதிர்பார்ப்பு அதிகம் கொடுக்கிறார் இயக்குனர். படம் வந்தாள் தெரியும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.