February 1, 2017
பூர்வா ஜோஷிபுரா எங்கிருந்தாலும் "வாடி" வாசலுக்கு வரவும்... பழனிபாரதி செம கலாய் !
பீட்டா இந்தியா தலைவர் பூர்வா ஜோஷிபுரா எங்கிருந்தாலும் அலங்காநல்லூர் வாடிவாசலுக்கு வரவும் என கிண்டலடித்துள்ளார் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் பழநிபாரதி.
பீட்டா இந்தியா தலைவர் பூர்வா ஜோஷிபுராவை கிண்டலடித்து கவிஞர் பழனிபாரதி போட்டுள்ள முகநூல் பதிவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது
.
ஜல்லிக்கட்டை நடத்தவே முடியாது. நான் இதை சவாலாக சொல்கிறேன் என்று திமிராக பேசியவர் பூர்வா ஜோஷிபுரா. ஆனால் தமிழக சட்டசபையில் இயற்றப்பட்ட சட்டத்தை தடுக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டே நேற்று கூறி விட்டது. இதையடுத்து கடந்த 3 வருடமாக தடைபட்டுக் கிடந்த ஜல்லிக்கட்டு நடைபெறப் போகிறது.
இந்த நிலையில் பிரபல திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான பழனிபாரதி தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ''வெளிப்படையாக நான் சவால் விடுகிறேன்... தமிழர்கள் ஜல்லிக்கட்டை நடத்தவே முடியாது'' என்ற 'பீட்டா' பூர்வா ஜோஷிபுரா எங்கிருந்தாலும் அலங்கா நல்லூர் வாடிவாசலுக்கு வரவும்...! என்று கிண்டலடித்துள்ளார்.
இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பழனிபாரதி மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஜல்லிக்கட்டு சட்டத்திற்குத் தடை விதிக்க முடியாது என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவை பல்வேறு விதங்களில் கொண்டாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பூர்வா ஜோஷிபுரா எங்கிருந்தாலும் "வாடி" வாசலுக்கு வரவும்... பழனிபாரதி செம கலாய் !
Reviewed by மறத்தமிழன்
on
February 01, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 01, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.