Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 26, 2017

மனைவி,மூன்று குழந்தைகளை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை..!


கேரள மாநிலத்தில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஜானி ஜோசப் என்பவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன.ஜானியின் மாமியாரும் அவரது வீட்டில் வசித்து வந்துள்ளார்.கடந்த சில மாதங்களாக ஜானி,கடும் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளதாகவும் தெரிகிறது.


இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தன்னுடைய மாமியாரை,அவரது சொந்த ஊருக்கு ஜானி அனுப்பி வைத்துள்ளார்.பின்னர் தான் வைத்திருந்த கத்தியால்,தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.பின்னர் ஜானியும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
“தான் கடன் வாங்கியுள்ள நபர்,அவருடைய மகளுக்கு திருமணம் நிச்சயித்துள்ளதால் அவருக்கு பணம் கொடுக்க வேண்டியிருப்பதாக ஜானி என்னிடம் சொன்னார்.இதற்கிடையில் அவரது மனைவியின் பூர்வீக சொத்துகள் குறித்த பிரச்சனையும் நடந்து கொண்டிருந்தது.மேலும் அவர் 30 லட்ச ரூபாய் வரை வங்கியில் கடன் வாங்கியிருந்தார்.”என ஜானியின் நண்பர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.