தமிழக முதல்வராக பொறுப்பேற்று உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
குறிப்பாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும், சசிகலாவிற்கு எதிரானவர்களும், எடப்பாடி பழனிசாமியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக முதல்வரின் சொந்த மாவட்டத்திலேயே அவருக்கு எதிராக போராட்டங்கள் துவங்கி உள்ளன.
முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.கே.செல்வம், எம்.கே.செல்வராஜ், ரவிச்சந்திரன், நடேசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தலைமையில் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு ஓன்று திரண்ட சுமார் நூறுக்கும் மேற்பட்டோர்,
முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும் மக்களின் விருப்பதற்கு மாறாக செயல்பட்டு வரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை கண்டித்தும், மக்களை மதிக்காத அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திட வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர்,
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.செல்வம், நாளை நடைபெற உள்ள வாக்கெடுப்பில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் விருப்பதற்கு ஏற்ப வாக்களிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் பணத்தை பெற்று கொண்டு வாக்களித்ததாகவே மக்கள் எண்ணுவார்கள் என்றார்.
மேலும் அவர் கூறுகையில் முதல்வர் பதவிக்கே தகுதி இல்லாத ஒருவரை நியமித்து இருப்பது கண்டிக்கதக்கது என்றும், இதற்கு உறுதுணையாக இருக்கும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உடனடியாக தங்களது பதவியை ராஜினாமா செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதனை தொடர்ந்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதே போன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.,எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது.
சில ஊர்களில் அ.தி.மு.க.,எம்.எல்.ஏ.,க்களின் படத்திற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.