Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 1, 2017

மத்திய பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள்’ ஒரு பார்வை


இன்று காலை கடும் அமளிக்கிடையே 11.08 மணிக்கு நிதியமைச்சர் அருண் ஜெட்லி மக்களவையில் 2017- 17ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையை வாசிக்க ஆரம்பித்தார்.

இதனைத்தொடர்ந்து, அருண்ஜெட்லி தொடர்ந்து பல்வேறு அம்சங்கள் குறித்து தெரிவித்ததாவது:

ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்திய பொருளாதாரம் உயர்ந்து வருகிறது.
உலக அளவில் சிக்கலலான நிலை இருந்தபோதிலும் இந்திய பொருளாதாரம் பிரகாசமாக உள்ளது.
2016ம் ஆண்டில் வெளிநாட்டு முதலீடுகள் 36% உயர்வு

இளைஞர்நலன், வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை

உலகின் 6வது மிகப்பெரிய உற்பத்தி நாடாக இந்தியா விளங்குகிறது.

ஜிஎஸ்டியை அமல்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சட்டத்திற்கு ஆதரவு அளித்த அனைத்து மாநிலங்களுக்கும் நன்றி.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு கணிசமாக இருக்கும்

கடந்த ஓராண்டில் பொருளாதார சீர்திருத்தங்கள் செய்வதில் சிறப்பான இடத்தில் உள்ளது.

பணமதிப்பு குறைப்பு ஊழலை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க உதவியுள்ளது.

கறுப்புப்பணத்தை ஒழிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவாக வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் வழங்க வழி ஏற்படுத்தப்படும்.

உலகின் 6வது மிகப்பெரிய உற்பத்தி நாடாக இந்தியா திகழ்கிறது.

கிராமப்புறங்களின் கட்டமைப்பு, மேம்பாடு மற்றும் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்வதே நோக்கம்

விவசாயிகளின் வருமானத்தை 5 வருடங்களில் இரட்டிப்பாக்குவதே முதல் நோக்கம்.

ஏழைகளின் வளர்ச்சிக்காக பொருளாதார சீர்த்திருத்தங்கள் தொடரும்.

பொருளாதார வளர்ச்சியில் உலகளவில் இந்தியா ஒரு என்ஜினாக இருந்துவருகிறது.

10 லட்சம்கோடி விவசாயக்கடன் வழங்க இலக்கு. கடந்த ஆண்டு சுமார் 9 லட்சம் கோடி கடன் வழங்கியுள்ளது.

    மேலும் செய்திகளுக்கு தொடர்ந்து பாருங்கள்…

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.