February 28, 2017
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை விரட்டுவோம்: நெடுவாசலில் வைகோ ஆவேசம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடவில்லை என்றால், மக்கள் ஒன்றுசேர்ந்து விரட்டியடிப்பார்கள் என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்தார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக, கடந்த 10 நாள்களுக்கும் மேலாக நெடுவாசல் கிராமத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் திட்டத்துக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் போராட்டத்தின் தன்மையும் வலுப்பெற்றுவருகிறது.
இந்நிலையில், நெடுவாசல் போராட்டத்துக்குச் சென்ற ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்துப் பேசினார். மேலும், பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களையும் விமர்சித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால், விவசாயம் அழிந்துபோகும். ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான உரிமம், பாஜக-வின் முன்னாள் எம்பி-யின் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சியைக் கடந்து இந்தப் போராட்டம் வெற்றிபெறும். மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்குக் கொடுத்த உரிமத்தை உடனே ரத்துசெய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை விரட்டுவோம்: நெடுவாசலில் வைகோ ஆவேசம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 28, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 28, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.