Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 21, 2017

ஓஎன்ஜிசி சார்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றிலிருந்து வெளியேறும் எண்ணெய்: ஆலங்குடி அருகே கிராம மக்கள் அச்சம்


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங் குடி அருகே வாணக்கன்காட்டில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் இருந்து எண்ணெய் வெளியேறுவதால், கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஆலங்குடி அருகே உள்ள வடகாட்டில் கடந்த 15 ஆண்டு களுக்கு முன்பு 4 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, அங்கு ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சார்பில் சுமார் 3 ஆயிரம் அடி ஆழத்துக்கு ஆழ் துளைக் கிணறு அமைத்து, எரி பொருள் சோதனை மேற்கொள் ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து வாணக்கன் காடு, நெடுவாசல் மற்றும் கோட் டைக்காடு ஆகிய இடங்களிலும் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், நெடுவாசலில் இருந்து ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித் துள்ளது.
இதற்கு நெடுவாசல் கிராமத்தி னர் எதிர்ப்பு தெரிவித்து வருகின் றனர். அங்கு நேற்று ஆய்வுக்கு சென்றிருந்த வருவாய்த் துறை யினரை அப்பகுதியினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும், இத்திட் டத்தை தடுத்து நிறுத்துவதற்காக ஊர்க் கூட்டத்தின் மூலம் குழுக்கள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், வாணக்கன்காடு கிராமத்தில் விளைநிலத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றின் மேல்பகுதியில் பொருத் தப்பட்டிருந்த மூடி சேதமடைந்து, அதில் இருந்து கொப்பளித்து வெளி யேறும் ஒருவகையான எண்ணெய், அப்பகுதியில் 10 அடி ஆழமுள்ள தொட்டியில் குளம்போல தேங்கி உள்ளது. இந்த எண்ணெய் சூடாகவும், எரியக்கூடியதுமாக உள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வடகாட்டில் இயற்கை எரிவாயு எடுக்க உள்ளதாக அப்பகுதி விவசாயிகளிடம் அண்மையில் தெரிவித்த எண்ணெய் நிறுவன அலுவலர்கள், இதற்கு மின் இணைப்பு பெறுவது தொடர்பாக வடகாடு மின் வாரிய அலுவல கத்தில் ஆலோசனை பெற்றுச் சென்றுள்ளனர்.
ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட வட காடு, வாணக்கன்காடு, கோட் டைக்காடு மற்றும் நெடுவாசல் மக்களிடம் எரிவாயு தொடர்பாக ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கு வது குறித்து சம்பந்தப்பட்ட துறையினரோ, மாவட்ட நிர்வாகமோ எவ்வித நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை என சமூக ஆர் வலர்கள் குற்றஞ்சாட்டுகின் றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.