Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 14, 2017

பன்னீரை எக்காலத்திலும் முதல்வராக விடமாட்டேன்! தம்பிதுரை ஆவேசம்!


சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் குற்றவாளிகள் என்று சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து உத்தரவிட்டுள்ளது.

இதுபற்றி டெல்லியில் தம்பிதுரை கூறியுள்ளதாவது; பன்னீர்செல்வம் ஒரு துரோகி. அவர் எந்த காலத்திலும் முதல்வராகவோ, அதிமுகவை கைப்பற்றவோ விடமாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

மேலும், சின்னம்மா மீதான சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம் என்றும் அதிமுகவின் சட்டமன்ற தலைவராக எடப்பாடியை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, பன்னீர்செல்வம் தலைமையிலான ஆட்சி அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் தம்பிதுரை இவ்வாறு கூறியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.