February 23, 2017
அதிமுக துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் பொறுப்பேற்பு
டிடிவி தினகரன் அதிமுக துணை பொதுச் செயலாளராக இன்று சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.
அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவின் சகோதரி மகன் டிடிவி தினகரன். முன்னாள் எம்.பி.யான டிடிவி தினகரன் கடந்த 2011-ம் ஆண்டு அதிமுகவில் இருந்து டி.டி.வி.தினகரன் நீக்கப்பட்டார். இந்நிலையில் டி.டி.வி.தினகரன், டாக்டர் எஸ்.வெங்கடேஷ் ஆகியோரை சசிகலா கடந்த 15-ம் தேதி அன்று கட்சியில் மீண்டும் சேர்த்தார்.
கட்சியில் மீண்டும் சேர்த்த ஒருசில மணி நேரங்களிலேயே கட்சியின் துணை பொதுச் செயலாளர் பொறுப்பு தினகரனுக்கு வழங்கப்பட்டது.
சமீப காலத்தில் அதிமுகவில் துணைப் பொதுச் செயலாளர் என்ற ஒரு பொறுப்பு இல்லாதிருந்த நிலையில் தினகரனுக்காக துணைப் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்லும் முன், அவர் சிறையிலிருந்தாலும் கட்சி மீது கட்டுப்பாட்டை செலுத்த வேண்டும் என்பதற்காகவே அவரது உறவினருக்கு அவசர அவசரமாக இப்பொறுப்பு வழங்கப்பட்டதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் டிடிவி தினகரன் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார்.
அதிமுக துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் பொறுப்பேற்பு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 23, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 23, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.