Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 23, 2017

சென்னையை தாக்கவுள்ள அடுத்த பேரிடர் – ஆய்வாளர்கள் எச்சரிக்கை! மக்களே உஷார்!


சென்னையை மிக விரைவில் குடிநீர் பஞ்சம் போட்டுத் தாக்க இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இப்போதைக்கு 40 நாட்களுக்கு தேவையான குடிநீர் மட்டுமே கையிருப்பு உள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. இந்த வருடம் பருவ மழை பொய்த்ததால், தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான நீர் தேக்கங்கள் வற்றியுள்ளதால் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் அதிகாரிகள் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.
இந்த நிலையில், சென்னையில் 40 நாட்களுக்கு தேவையான குடிநீர் மட்டுமே கையிருப்பு இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.
சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரி வறண்டு போனதால் அங்கிருந்து சென்னைக்கு குடிநீர் அளிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
இதே போல் ஆந்திராவில் இருந்து வரும் கிருஷ்ணா நதி நீர் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்த சில மாதங்களில் துவங்க உள்ள கோடைக் காலத்தில் சென்னை மாநகர் மிகப்பெரிய குடிநீர் பஞ்சத்தை எதிர் நோக்கியுள்ளது.
தற்போதைய சூழலில் சென்னை குடிநீர் பஞ்சத்தை தீர்க்க கோடை மழை பெய்தால் மட்டுமே முடியும் எனவும் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க பல திட்டங்களை செயல்படுத்த இருப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.