Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 14, 2017

ட்ரம்ப் தற்போது, குடியேற்றம் தொடர்பாக புதிய சட்டம் ஒன்றை தயார் செய்து வருவதாக செய்தி


7 முஸ்லீம் நாடுகளுக்கெதிரான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்
ட்ரம்ப்பின் நிலைப்பாட்டுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டதையடுத்து, ட்ரம்ப் தற்போது, குடியேற்றம் தொடர்பாக புதிய சட்டம் ஒன்றை தயார் செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அடுத்த வாரமளவில் இது குறித்த சட்டமூலத்தில் ட்ரம்ப் கையெழுத்திடலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பயணத் தடைக்கு எழுந்துள்ள சட்டரீதியான சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளப் போவதாக அண்மையில், ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்திருந்த போதும், தற்போது இதனால் கால தாமதம் ஏற்படும் என்பதால் அவர் இந்த முடிவை எடுத்திருக்ககூடுமென அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
ட்ரம்ப்பின் தடை உத்தரவால் கடும் அதிரப்தியடைந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டினத்தவர்கள் இதற்கு பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். அத்தோடு, உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் ட்ரம்பின் உத்தரவுக்கு தற்காலிக தடைவிதித்தது. நீதிமன்றத்தின் தடைக்கு எதிராக அரசு சார்பில் சான்பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய சான்பிரான்சிஸ்கோ நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதன் பிறகே ட்ரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.