Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 26, 2017

வயிற்று புண்ணை குணமாக்கும் மணத்தக்காளிக்கீரை பொரியல்!


தேவையான பொருட்கள் :

மணத்தக்காளிக்கீரை – ஒரு கட்டு,
வெங்காயம் – 2
தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்,
கடுகு, உளுந்தம்பருப்பு, – தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – ஒன்று,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.



செய்முறை :

 வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மணத்தக்காளி கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

 வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

 வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய கீரையை சேர்த்து வதக்கவும்.

 கீரை நன்றாக வெந்ததும் கடைசியாக இறக்கும் போது தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

சூப்பரான மணத்தக்காளிக்கீரை பொரியல் ரெடி.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.