February 28, 2017
ஹோட்டலில் சர்வர் வேலை பார்க்கும் ஒபாமாவின் மகள்!
ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மகள் சாஷா ஒபாமா, வெள்ளை மாளிகையின் வாழ்க்கையை, வசதிகளை ஒரு வார காலத்திற்கு மறந்து, நான்ஸி கடலுணவு உணவகமொன்றில் சென்ற வாரம் வேலை செய்திருக்கிறார்.
மசாசூட்ஸ் மாநிலத்தில் உள்ள மர்தாஸ் வின்யார்ட் தீவிலுள்ள நான்ஸி உணவகத்தில், கோடை கால விடுப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, சாஷா உணவு பரிமாறும் வேலையைச் செய்திருக்கிறார்.
உணவக வேலைக்காக தனது பெயரை, தனது முழுப்பெயரான நதாஷா என்று பதிவு செய்து கொண்டிருக்கிறார்.
பெற்றோர்களும் சரி, நண்பர்கள் குழுவிலும் சரி, நதாஷாவை சாஷா என்றே அழைப்பார்கள். நதாஷா, உணவகத்தின் சீருடையான நீல நிற டீ-ஷர்ட், காக்கி பேண்ட், தொப்பி அணிந்து வேலை செய்திருக்கிறார்.
தொடக்கத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்திருப்பவர் ஒபாமாவின் மகள் என்று யாருக்கும் தெரியவில்லை.
ஆனால், ஆறு மெய்க்காப்பாளர்கள் நதாஷாவைப் பின் தொடருவதும், நடுநடுவே வேலைகளில் உதவி செய்வதும், நதாஷா, யார் என்று காட்டிக் கொடுத்துவிட்டது. அடுத்த விநாடி நதாஷா பரபரப்பு செய்தியானார்.
பாரக் ஒபாமாவின் மகள் நதாஷா உணவகம் ஒன்றில் வேலை செய்கிறார் என்று செய்திகள் எட்டுத்திக்கும் பரவிய போதிலும், நதாஷாவின் பெற்றோர் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. நதாஷாவிற்கு வயது பதினைந்து.
தனது இரண்டு மகள்களையும் கூடுமானவரை சாதாரணமாக வாழ தயார் செய்து கொண்டிருப்பவர் அம்மா மிச்செல் ஒபாமா.
அதற்கான ஒரு வழிமுறைதான் இந்த பகுதி நேர உணவக வேலை. கைச் செலவுக்காக சின்னச் சின்ன வேலைகள் செய்வது, சொந்த காலில் நிற்கச் செய்யும் முயற்சி என்பது நதாஷாவுக்கும் தெரிந்தேயிருக்கிறது.
உணவு எடுத்துச் செல்லும் முகப்பு நிலையத்தில் பணியாற்றுவது தவிர, மதிய நேரத்துக்கு உணவகத்தை திறப்பதற்காக உணவகத்தை தயார்படுத்த உதவி செய்வது மற்றும் மேஜைகளில் உணவு பரிமாறுவதும் நதாஷாவின் ஏனைய வேலைகள்.
தினமும் நான்கு மணி நேர வேலை. காலை பதினோரு மணிக்கு உணவகம் திறக்கும்.
ஹோட்டலில் சர்வர் வேலை பார்க்கும் ஒபாமாவின் மகள்!
Reviewed by மறத்தமிழன்
on
February 28, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 28, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.