Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 4, 2017

கடலில் கலந்துள்ள பல ஆயிரம் டன் எண்ணெய் கழிவுகள்... பல அலட்சியங்களும், மர்மங்களும் - தமிழச்சி


"கடல் பகுதியில் எண்ணெய் படலம் இருந்தால் நவீன கருவிகள் மூலம் அகற்ற முடியும். கரை ஒதுங்கியுள்ளதால் மனித சக்திகள் தான் அகற்ற முடியும்."
- பொன்.ராதாகிருஷ்ணன்

"சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே 28.01.2017 அதிகாலை 3 மணிக்கு இரு கப்பல்கள் மோதிக் கொண்டதில் எண்ணெய் கசிவுகள் ஏற்பட்டது" என்று செய்திகள் வெளியான தினத்தில்....

கப்பல் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,

"கப்பல்கள் மோதிக் கொண்டது உண்மைதான். ஆனால் எண்ணெய் கசிவுகள் கடலில் கலக்கவில்லை" என்று பத்திரிக்கைகளுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டார்.

ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் எண்ணெய் கசிவுகள் கடலின் மேற்பரப்பில் படிய ஆரம்பித்த நிலையில் மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கையின் வாதத்தை சிறிது மாற்றினார்.

"எண்ணெய் கசிவுகள் கடலில் கலந்தாலும் அதனால் பாதிப்புகள் இல்லை" என்றார் இந்த பாஜகவினரின் காவி விஞ்ஞானி.

ஆனால், "கடல்வாழ் உயிரினங்கள் செத்து மிதந்தன."

இரு கப்பல்களின் மோதலால் ஏதோ சிறிய பாதிப்பு என்று நினைத்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மக்களுக்கு பல கி.மீ கணக்கில் எண்ணெய் கசிவுகளின் பாதிப்புகளை கண்டபொழுதே தாக்கத்தை உணரத் தொடங்கினர்.

தமிழக மாணவர்கள் 'சமுதாய பணி' என்று எண்ணெய் கசிவுகளை அப்புறப்படுத்த முற்பட்டனர். இளைஞர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், என்று வாளியோடு 'மரணபணி'க்குள் நுழைந்தனர்.

"பல்லாயிரக்கணக்கில் ஜல்லிக்கட்டிற்கு கூடிய மாணவர்கள் எண்ணெய் கழிவுகளை அகற்றுவதற்கு வெறும் ஆயிரம் மாணவர்கள் மட்டும்தானா?" என்று நக்கலடித்தார் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா.

பா ஜ க வின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.டி.ராகவன் தொலைகாட்சி விவாதத்தில்,
"வெறும் 80 டன் எண்ணெய் கழிவுதான் கடலில் கலந்துள்ளது" என்று கூறுகிறார்.

"எத்தனை டன் எண்ணெய் கழிவுகள் கடலில் கலந்துள்ளன?" என்ற தகவல்களை கப்பல் நிர்வாகிகளே அசம்பாவிதம் நடந்த இதுவரையில் தெரிவிக்காத போது கே.டி.ராகவன், "80 டன் கழிவுகள் தான் கலந்தது" என்று  எப்படி கூறுகிறார்?

இதன் அரசியல் பின்னனி இதுதான்:

'டாவ்ன் கப்பல்' கடலில் கொட்டியது எண்ணெய் என்று தமிழக மக்களை நம்ப வைக்க முற்படுகிறது. ஆனால், கழிவுகள் தான் கப்பலில் இருந்து திட்டமிட்டு வெளியேற்றப்பட்டுள்ளது.

இந்த டாவ்ன் நிறுவனம் பா ஜ க விற்கு நெருக்கமானது, விசுவாசமானது. இந்நிறுவனத்திற்கு பல வர்த்தக வாய்ப்புகளை பாஜக ஆட்சியில் வாரிவழங்குவதை வெளிப்படையாகவே செய்திருக்கிறது.

'டாவ்ன்' தலைமை நிர்வாக அதிகாரி 'ராஜேஷ் தேஷ்' அவாக்களுடன் நெருக்கமாகவே இருப்பவர். அந்த நன்றி கடன்களுக்காகவாவது பா ஜ க வினருக்கு எதையாவது செய்து தொலைக்க வேண்டுமே,,,,

மாணவர் போராட்டத்தில் தமிழக காவல்துறை மற்றும் தமிழக அரசின் மீது ஏற்பட்ட நெருக்கடியையும், மக்களின் கடும் விமர்சனங்களையும் திசைமாற்ற எண்ணெய் கசிவு நாடகத்தை பா ஜ கவும் அதன் எடுபிடியான அதிமுக வும் இணைந்து நடத்தியது.

2016 இல் நடைபெற்ற தேர்தலில், ஜெயலலிதா மீண்டும் வெற்றி பெற்றபோதே தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற துணிந்துவிட்ட பா ஜ க,,,,,

சுவாதி படுகொலை நிகழ்த்தி இஸ்லாமிய வன்முறை தூண்டி கலவரத்தை உண்டாக்க முற்பட்டது. அது இணையதளங்களில் அம்பலமாகவே ஒரு தலைக் காதல் என்னும் பெயரில் ராம்குமாரை குற்றவாளியாக்கியது. அந்த கட்டுக்கதைகளும் அம்பலமாகவே ராம்குமாரை சிறைக்குள் படுகொலை செய்தது. இதில் அதிருப்தியான ஜெயலலிதாவை படுகொலை செய்து அப்போலாவிற்குள் வைத்தது.

தற்பொழுது தமிழ்நாட்டை முழுமையாக தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்த பிறகு ஜெயலலிதா மறுத்து வந்த மத்தியரசின் அனைத்து திட்டங்களையும் பன்னீர்செல்வத்தின் மூலம் நிறைவேற்றிக் கொண்டு வருக்கிறது.

இத்தனைக்கும் பா ஜ க வினர் மறுப்பு தெரிவிப்பார்களானால்  மத்தியரசின் கட்டுபாட்டிற்குள் உள்ள சென்னை துறைமுக  இயக்குனராக
  பா ஜ கவின் மாநில பொறுப்பாளரான , 30 வழக்குள் நிலுவையில் உள்ள கருப்பு முருகானந்தத்தை  நியமித்தது ஏன்?

"வழக்கு நிலுவையில் உள்ளவர்கள் தேர்தலில் நிர்கக முடியாது என்று சட்டவிதிகள் உள்ளன. தேர்தலில் நின்று ஜெயித்தோடு , சமூக விரோத செயலில் ஈடுபட்டவருக்கு இத்தனை சலுகை காட்டவேண்டிய தேவை மத்தியரசுக்கு ஏன் வந்தது?" என்பதை தமிழ்நாட்டில் உள்ள பா ஜ க வினராவது விளக்க வேண்டும்.

நிலப்பகுதிகளில் இவ்வளவு அக்கிரமங்கள் செய்யும் பா ஜ க வினர் கடலுக்குள் நடத்தும் அரசியலையும் தமிழர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்ட கப்பல் முதலாளிக்கு இன்சுரன்ஸ் மூலம் புது கப்பல் கிடைக்கலாம். ஆனால் தமிழர்களின் கனிமவளங்களை அரசியல் நோக்கத்திற்காக சின்ன பின்னமாக்கி கொண்டிருக்கும் பா ஜ க வின் அய்யோக்கிய அரசியலை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

"கழிவுகளை கருவிகள் அள்ள முடியாது மக்கள் சக்திதான் அள்ள வேண்டும்" என்ற பொன். ராதகிருஷ்ணனின் கருத்து அவர் சார்ந்த பா ஜ க வின் தூய்மை இந்தியா திட்டத்திற்கே எதிரானது.

நவீன யுகத்திற்கு கருவிகளை இயக்கும் மனிதனின் ஆற்றல் வளர்த்தெடுக்கபட வேண்டுமே தவிர, கருவிகளை புறக்கணித்துவிட்டு மக்களை மாக்களாக நடத்தமுற்படும் மாட்டுகார மூளையின் அறிவுரை தமிழக மக்களுக்கு தேவையில்லை.



#தமிழச்சி
04/02/2017

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.