புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் என்ற கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் என்ற இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
விவசாய நிலங்களில் பல ஆயிரம் அடிகளுக்கு மேல் நிலத்தில் துளையிட்டு பூமிக்கு அடியில் இருக்கும் ஹைட்ரோ கார்பன் எரிவாயுவை எடுப்பதால் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நெடுவாசலை சேர்ந்த இளைஞர்கள், வலைத்தளங்களின் மூலம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள். தமிழக இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஜல்லிக்கட்டு புரட்சி இளைஞர் அமைப்பு விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர். இதனால் மீண்டும் நெடுவாசலில் புரட்சி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே நேற்று முன்தினம் சென்னையில் ஐ.டி ஊழியர்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தினர். மேலும் விவசாய மக்களின் நலனுக்காக மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் வெளிநாட்டு வாழும் தமிழர்களும், இளைஞர்களும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நெடுவாசல் கிராம மக்களுக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.