February 25, 2017
பிரதமர் மோடியின் கனவு திட்ட விளம்பர தூதராக நடிகை ஷில்பா ஷெட்டி நியமனம்
பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றான தூய்மை இந்தியா திட்டத்தின் விளம்பர தூதராக நடிகை ஷில்பா ஷெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அரசின் ‘தூய்மை இந்தியா’ திட்ட விளம்பர தூதராக நடிகை ஷில்பா ஷெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். 41 வயதாகும் ஷில்பா ஷெட்டி, ரோடுகளில் குப்பைகளை போடுபவர்களை திருத்தும்வகையில் ரேடியோ, தொலைக்காட்சிகளில் பிரசாரம் செய்ய உள்ளார். இந்த இயக்கத்துக்கான அவரது படத்துடன் கூடிய விளம்பர சுவரொட்டிகள் விரைவில் நாடு முழுவதும் வினியோகிக்கப்பட உள்ளன.
இதுபற்றி தூய்மை இந்தியா திட்டத்தின் இயக்குனர் பிரவீண் பிரகாஷ் கூறும்போது, ‘‘மக்களிடம் பிரபலமாக விளங்குபவர்களை இந்த திட்டத்தின் இலக்கை அடைய உதவி செய்யும்படி கேட்டு வருகிறோம். அதன்படி ஷில்பா ஷெட்டியின் பிரசார இயக்கம் விரைவில் தேசிய அளவில் நடைபெறும்’’ என்றார்.
பிரதமர் மோடியின் கனவு திட்ட விளம்பர தூதராக நடிகை ஷில்பா ஷெட்டி நியமனம்
Reviewed by மறத்தமிழன்
on
February 25, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 25, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.