February 15, 2017
விறகுவெட்டியும் ஓ.பி.எஸ்ஸும்!
ஒரு நாள் விறகுவெட்டி ஒருவன் காட்டிற்குள் மரம் வெட்டிக்கொண்டிருந்த பொழுது அவனது கோடாரி தவறி ஆற்றுக்குள் விழுந்துவிட்டது.
பிழைப்பிற்கு இருந்த ஒரு கோடாரியும் ஆற்றில் விழுந்ததால் அழுது புலம்பிக்கொண்டிருந்தான் விறகு வெட்டி. அப்பொழுது ஒரு தேவதை
தோன்றி விஷயத்தை கேட்டறிந்த பின்னர் ஆற்றுக்குள் மூழ்கி ஒரு தங்கக் கோடாரியை எடுத்து வந்து காண்பித்து "இதுவா உன்னுடைய கோடாரி?" என்றதாம்
விறகு வெட்டி இல்லை என்றான்.
மறுமுறை மூழ்கி ஒரு வெள்ளிக் கோடாரியை எடுத்துவந்து, "இதுவா உன்னுடைய கோடாரி?" என்றது.
அப்பொழுதும் இல்லை என்றான் விறகு வெட்டி.
மறுமுறை மூழ்கி ஒரு இரும்புக் கோடாரியை எடுத்து வந்து காண்பிக்க மகிழ்ச்சியுடன் "ஆமாம்" என்றான்.
விறகு வெட்டியின் நேர்மையைப் பாராட்டி மூன்று கோடாரிகளையும் அவனுக்கே அளித்தது அந்த தேவதை. இது நமக்குத் தெரிந்த கதை.
இப்பொழுது அதே விறகு வெட்டி கதையில் நம்ம முதல்வர் ஓபிஎஸ்ஸை பொருத்திப் பார்ப்போம்.
அதிமுகங்குற ஆத்து ஓரமா அழுதுகிட்டு இருந்தாரு ஓபிஎஸ். இதப்பாத்த சுப்ரீம் கோர்ட்ங்குற தேவதை, 2001 ல ஜெயலலிதாவ முதல்வர் பதவியிலருந்து இறக்கிட்டு முதல்வர் பதவியை எடுத்து வந்து ஓபிஎஸ்கிட்ட குடுத்துச்சி. அத ஆறு மாசம் திருப்பித் திருப்பி பாத்துட்டு இது என்னோடது இல்லைன்னுசொல்லி திரும்ப குடுத்துட்டாரு ஓபிஎஸ்.
திரும்ப 2015 ல குன்காங்குற தேவதை மறுபடியும் முதல்வர் பதவிய எடுத்து வந்து ஓபிஎஸ்கிட்ட குடுத்துச்சி. அதயும் 8 மாசம் எதுவுமே செய்யாம திருப்பித் திருப்பி பாத்துட்டு, இது என்னோடது இல்லைனு திருப்பிக் குடுத்துட்டாரு.
திரும்ப அப்பல்லோ ரெட்டி மற்றும் சசிகலாங்குற இரண்டு தேவதைகள் 2016ல மறுபடியும் முதல்வர் பதவியை எடுத்துட்டு போய் ஓபிஎஸ்கிட்ட குடுத்துச்சிங்க. அதயும் ரெண்டு மாசம் வச்சிருந்துட்டு திரும்பக் குடுத்துட்டாரு.
கடைசில சுப்ரீம் கோர்ட்டுல உள்ள இரண்டு பெரிய தேவதைகள் ஓபிஎஸ்ஸோட நேர்மையப் பாராட்டி மிச்சம் இருக்க நாலு வருஷ முதல்வர் பதவி காலத்தையும் அவருக்கே குடுத்துட்டாங்க!
- முத்து சிவா
விறகுவெட்டியும் ஓ.பி.எஸ்ஸும்!
Reviewed by மறத்தமிழன்
on
February 15, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 15, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.