Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 7, 2017

சசிகலா எதிரிலேயே சங்கு ஊதிய அதிமுக தொண்டர் குழு; அதிர்ச்சியில் திகைத்த போலீசார்


சசிகலா சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்தெடுத்ததையடுத்து, அவர் முதல்வராக பதவியேற்க ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன. ஆனால், சசிக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அதிமுக தொண்டர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக தொண்டர்கள் 10 பேர், போயஸ் கார்டன் சென்றுள்ளனர். அவர்கள் அந்தப் பகுதியில் நுழைந்தபோது, சசிகலா புகழ்பாடி சென்றுள்ளனர். சசியின் புகழ்தானே என்று போலீசாரும் அனுமதித்துள்ளனர்.

அப்போது, போயஸ் தோட்டத்தின் அருகே சென்று, அவர்கள் மறைத்துவைத்திருந்த சங்கை எடுத்து ஊத ஆரம்பித்தனர். அந்த நேரத்தில் சசிகலா பால்கனியில் நின்று அதிர்ச்சியடைந்து பார்த்துக்கொண்டிருந்தார்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த போலீசார் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர். உடனே அதிமுக தொண்டர்கள் 10 பேரையம் கைது செய்து தற்போது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.