Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 25, 2017

எடப்பாடி நெடுவாசலை காப்பாரா..? பதவிக்காக பறிக்கொடுப்பாரா..? புறப்பட்டது இளைஞா்படை..!


தமிழக அரசு விரும்பினால் எந்த ஒருவித போராட்டமும் வெற்றியடையும். ஆம் உண்மைதான்.

அன்று தமிழக அரசு நினைத்தது ஜல்லிக்கட்டை நடத்தியே ஆகவேண்டும் என்று,அதற்கு உறுதுணையாக இளைஞா்கள், மாணவர்கள் போராட்டம் இருந்தது.

மாநில அரசு அந்த அறவழிப் போராட்டத்திற்கு காவல்துறையினரின் மூலம் பாதுகாப்புக் கொடுத்தது.

இந்த போராட்டத்தை முன்நிறுத்தி முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மத்தியஅரசின் உதவியோடு அவசர சட்டம் கொண்டு வந்து அனுமதிப்பெற்றார்.

ஒபிஎஸ் பெயா் வாங்கியதை பொறுக்க முடியாத சசிகலா குடும்பத்தினா் மாணவர்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்து விட்டனா் என்று கூறி அனைவரையும் அடித்து விரட்டினா். இது அன்று.

இன்று மக்களின் உணவுப்பிரச்சனை, வாழ்வாதாரப்பிரச்சனை, நிலத்தடி நீரை இழக்கும் பிரச்சனை, தமிழகத்தையே பாலைவனமாக மாற்ற நடக்கும் சதி.

இதற்கும் இளைஞா்கள், மாணவர்கள் தன்னெழுச்சியாக ஒன்று கூட துவங்கியுள்ளனா்.

தற்போது முதல்வராக இருப்பவரும் ஒரு விவசாயக்குடும்பத்தை சோ்ந்தவா்தான். அவருக்கும் ஹைட்ரோகார்பன் மூலம் ஏற்படும் தீங்கு குறித்து தெரியும்.

முதல்வா் எடப்பாடி 27ம் தேதி இது குறித்து பிரதமரிடம் பேசுவதாக இருக்கிறாராம்.

இவரும் மக்கள் எண்ணத்திற்கு ஏற்ப தடை உத்தரவை மத்திய அரசிடம் இருந்து பெற்று வரவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்ப்பார்க்கின்றனா்.

இல்லை இவர் தனது பதவியை காப்பாற்றிக்கொள்ள தமிழகம் பாலைவனமாக மாறுவதற்கு உறுதுணையாக இருப்பாரா என்பது 27ம் தேதிக்கு பின்புதான் தெரியும்.

தமிழகத்தை காக்க இளைஞா்கள் படையினா் புறப்பட்டுவிட்டனா். அவர்களின் உணா்வுக்கு மதிப்பளித்து அறவழிப்போராட்டத்துக்கு அரசு வழிவிட வேண்டும் இவ்வாறு பொதுமக்கள் எதிர்ப்பார்க்கின்றனா்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.