February 20, 2017
பாவனாவுக்கு திருமணம் நிச்சயமான நேரத்தில் மானபங்கம் ஏன்?: விசாரிக்கும் போலீஸ்
நடிகை பாவனாவுக்கு திருமணம் நடக்க உள்ள நேரத்தில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரள மாநிலம் கொச்சியில் நடிகை பாவனா கடந்த வெள்ளிக்கிழமை இரவு காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு மலையாள திரையுலகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
திருமணம்
பாவனாவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. திருமணம் நடக்க உள்ள நேரத்தில் திட்டமிட்டு மானபங்கப்படுத்தப்பட்டது ஏன் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லால்
பாவனாவை அந்த கயவர்கள் காரில் இருந்து இறக்கிவிட்டதும் அவர் நேராக மூத்த நடிகரான லாலின் வீட்டிற்கு சென்று அவரிடம் தனக்கு நடந்த கொடுமையை கூறி கதறி அழுதுள்ளா
புகார்
பாவனா தனது வருங்கால கணவரிடம் நடந்த சம்பவம் பற்றி தெரிவித்து அவரின் அனுமதியுடனேயே போலீசில் புகார் அளித்ததாக லால் தெரிவித்துள்ளார்.
பிரித்விராஜ்
பாவனாவுக்கு நடந்த கொடுமை குறித்து அறிந்து முதலில் கோபப்பட்டு பொங்கியவர் நடிகர் பிரித்விராஜ். பாவனாவுக்கு ஆதரவு தெரிவித்து ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டார்.
பாவனாவுக்கு திருமணம் நிச்சயமான நேரத்தில் மானபங்கம் ஏன்?: விசாரிக்கும் போலீஸ்
Reviewed by மறத்தமிழன்
on
February 20, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 20, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.