Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 21, 2017

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அதிரடி மாற்றம்! மன்னார்குடியின் அடுத்த அட்டாக்!


உளவுத் துறை ஐ.ஜி. பதவியேற்று பத்து நாள் கூட முழுமையாக நிறைவடையவில்லை. அதற்குள்  வடக்கு மண்டலம் ஐ.ஜி., செந்தாமரை கண்ணன், உளவுத்துறை ஐ.ஜி.,யாக பதவியேற்க உள்ளதாகவும், இதற்கு மன்னார்குடி  குரூப் விருப்பப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முதலில், ஐ.எஸ். அதிகாரி தாமரைக்கண்ணன் பெயர் தான் லிஸ்ட்டில் இருந்தது. ஆனால் அவர்  இந்த பதவியில் விருப்பமின்றி ஒதுங்கிக்கொண்டாராம்.
சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.,யாக வருவதற்கு, டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன், சென்னை சிட்டி கமிஷனர் ஜார்ஜ் இருவருக்கும் இடையில் தான் கடுமையான போட்டியில் நிலவி வருகிறது. மாறுவேடத்தில் சட்டசபை பணி காவலராக செயல்பட்ட அம்பத்தூர் டி.சி., பதவி உயர்வு பட்டியலில் இருந்தவர். தற்போது அவரது பெயர் காத்திருப்பு பட்டியலுக்கு வரவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் இடமாற்றம் குறித்த ஆணை இன்று அல்லது நாளை வெளியாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.