Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 19, 2017

சாட்டையை சுழற்றுகிறது தேர்தல் ஆணையம்! சசிகலா குரூப் அதிர்ச்சி??


ஜெ., மறைவிற்கு பிறகு சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இதில் கட்சி சட்டவிதிகளுக்கு மாறாக நியமிக்கப்பட்டதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் சசிகலா மற்றும் அவரது உறவினர்களை எதிர்த்து வெளியேறினார் பன்னீர்செல்வம். மேலும் சசிகலா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை வைத்தார்.

இதனால் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக சசிகலா அறிவித்தார். இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார்.

சசிகலா சிறைக்கு செல்வது முன் அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமித்தார்.

இந்நிலையில் பன்னீர் அணியில் இருக்கும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், சசிகலா மற்றும் அவர் நியமித்த அனைவரையும் கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார்.

பன்னீர்செல்வம் அணியினர், சசிகலா பொதுச்செயலாளராக பொறுப்பேற்றது செல்லாது என்றும் மேலும் சசி நியமித்த உறுப்பினர்கள் பதவியும் செல்லாது என தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தனர்.

இந்நிலையில் பிப்ரவரி 24ம் தேதிக்கும் சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒருவேளை தேர்தல் ஆணையம் சசிகலா நியமனம் செல்லாது என அறிவித்துவிட்டால், சசிகலா மற்றும் அவரால் நியமிக்கப்பட்ட தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தற்போது பதவியேற்றிருக்கும் அமைச்சர்கள் ஆகியோரது பதவியும் செல்லாது என ஆகிவிடும்.

அப்படி ஆனால் மீண்டும் ஆட்சி கலைக்கப்பட்டு மறுதேர்தல் வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.