Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 25, 2017

கனவுகளுடன் விமானத்தில் சென்ற பயணிகள்... வெடித்துச் சிதறிய பரிதாபம்


அவுஸ்திரேலியாவில் சிறிய ரக விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஷாப்பிங் சென்டர் அருகே வெடித்துச் சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் எசண்டன் விமானநிலையத்திற்கு அருகில் இன்று காலை சிறிய ரக விமானம் ஒன்று திடீரென்று தொழில் நுட்ப கோளாறு காரணமாக அங்கு இருந்த டிஎப்ஓ ஷாப்பிங் சென்டர் அருகே விழுந்து வெடித்துச் சிதறியுள்ளது.
இதில் 4 அமெரிக்க பயணிகள் பயணம் செய்ததாகவும் அவர்கள் கோல் டிரிப்பிற்காக சென்றதாகவும் கூறப்படுகிறது.
விமானம் வெடித்துச் சிதறியதால் அதில் பயணம் செய்த விமானப் பயணி உட்பட ஐந்து பேரும் இறந்திருக்க கூடும் என்று கூறப்படுகிறது
சம்பவம் காலை 9 மணியளவில் நடந்ததால், ஷாப்பிங்செண்டர் மூடப்பட்டிருந்தது என்றும் இதனால் பொதுமக்கள் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் விமானத்தை இயக்கிய பயணி விமானத்தை உடனடியாக திசை திருப்பி, பாதுகாப்பாக இறக்கிவிடலாம் என்று நினைத்ததாகவும், ஆனால் அது பலன் அளிக்கவில்லை என்றும் இதனால் அங்கு இருந்த ஷாப்பிங் செண்டரின் மேற்பரப்பை விமானம் உரசிச் சென்று விழுந்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
முதல் இணைப்பு- அவுஸ்திரேலியாவில் விமான விபத்து: ஐவர் பலி
அவுஸ்திரேலியாவில் இன்று இடம்பெற்ற விமான விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
மெர்போர்ன் விமான நிலையத்திற்கு அருகில் இன்று அதிகாலை விமானம் ஒன்று விபத்திக்குள்ளாகியுள்ளது.
சிறிய ரக விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மெல்போர்னில் உள்ள வர்த்தக தொகுதியின் மீது இந்த விமானம் விழுந்து நொருங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
விமான விழுந்த பின்னர் அது தீ பற்றிக் கொண்டதாக தெரிய வருகிறது. இது தொடர்பான காணொளி தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.