February 21, 2017
டிடிவி தினகரன் விரைவில் முதல்வர்? தங்கதுரை எம்.எல்.ஏ.,அச்சாரம்! இபிஎஸ்க்கு வைச்சுட்டாங்க ஆப்பு?
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தொகுதி அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., தங்கதுரை. 5ம் தேதியில் இருந்து தொகுதி பக்கமே தலைகாட்டாத தங்கதுரை, போலீஸ் பாதுகாப்புடன் அலுவலகம் வந்தார்.
அவர் கூறியதாவது: தொகுதி மக்கள், கட்சி நிர்வாகிகளின் கருத்தை கேட்ட பின் தான் பழனிசாமிக்கு ஆதரவு கொடுத்தேன். தொகுதியில் இருக்க வேண்டும் என்றதால் அலுவலகத்திற்கு வந்தேன். நான், போலீஸ் பாதுகாப்பு கேட்கவில்லை. ஜெயலலிதா இருந்த போதே, தினகரன் கட்சிப் பணி செய்தார். கட்சிக்கு நல்லதே செய்வார். அவர் முதல்வர் ஆகும் காலம், விரைவில் வரும். இவ்வாறு அவர் கூறினார்.
பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த போது, ”சசிகலா விரைவில் முதல்வர் ஆவார்,” என, கூறினார். அதன்படி, பன்னீர்செல்வம் பதவியை சசி குடும்பத்தினர் பறித்தனர். அதே பாணியில் தற்போது, தங்கதுரை எம்.எல்.ஏ., கருத்து கூறியுள்ளார். இதனால், எடப்பாடியின் முதல்வர் பதவி விரைவில் பறிபோகும் என தெரிகிறது
டிடிவி தினகரன் விரைவில் முதல்வர்? தங்கதுரை எம்.எல்.ஏ.,அச்சாரம்! இபிஎஸ்க்கு வைச்சுட்டாங்க ஆப்பு?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 21, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 21, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.