Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 27, 2017

"துப்புறவுத் தொழில் தலித் மக்களுக்கு மட்டும்தான்":சர்ச்சையை கிளப்பும் அறிவிப்பு..!




துப்புறவு பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்களுக்கு தலித் மக்களுக்கு மட்டுமே தகுதி என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு செய்தி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள 20 துப்புறவு பணியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த 21-ஆம் தேதி அம்மாவட்ட ஆட்சியாளர் ஹரிஹரன் வெளியிட்டிருந்தார்.இந்த அறிவிப்பில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள்,பழங்குடியினர் நல உண்டு உறைவிடப்பள்ளி விடுதிகளில் காலியாக உள்ள 20 துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கான தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது
மேலும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போரின் இனம் என்ற தகவலில்,”இந்து ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் மட்டுமே” என குறிப்பிடப்பட்டுள்ளது.துப்புரவுத் தொழில் என்பது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகிய தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே பார்க்க வேண்டிய வேலையா? என சமூக ஆர்வலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தாழ்த்தப்பட்ட மக்கள் பொருளாதாரத்திலும்,சமூகத்திலும் முன்னேற வேண்டும் என்பதற்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறி வரும் அரசே,துப்புரவு பணியாளர் பணியிடங்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே என கூறியிருப்பது,அவர்களை மேலும் அடிமைகளாக்கும் முயற்சி எனவும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.