February 22, 2017
ஜியோ சிம் பயன்படுத்துகிறீங்களா? காத்திருக்கிறது மிகப்பெரிய ஆபத்து! உஷார்!
இன்றைக்கு இந்திய மொபைல் நெட்வொர்க் சந்தையையே திணற வைத்துக்கொண்டிருக்கிறது “ஜியோ”.
ஜியோவின் போட்டியை தாக்குபிடிக்க முடியாமல் வோடஃபோன் இந்தியாவை விட்டு வெளியேற முடிவெடுத்துவிட்டது. இந்தியாவில் இந்த துறையில் லாபங்களை அள்ளிக்கொண்டிருந்த பல முன்னணி நிறுவனங்களும் மண்ணை கவ்வும் அபாயநிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.
எது எப்படியிருப்பினும் மக்களுக்கு இலவசமாக கிடைப்பது நல்லதுதானே? என மக்கள் தங்களது தரப்பு வாதத்தை முன் வைக்கின்றனர். ஆனால் அதில் உள்ள அபாயகரமான விளைவுகளைப்பற்றி இப்போது பார்ப்போம்.
அம்பானி&கோ ஒன்றும் சமூக சேவை செய்யும் அமைப்போ அல்லது சமூக சேவகர்களோ கிடையாது. ஒரு ரூபாயை செலவழித்து நூறு ரூபாய் சம்பாதிக்கும் சூட்சுமம் தெரிந்தவர்கள்.
தற்போது நீங்கள் ஜியோ மொபைல் பயன்படுத்துபவராக இருந்தால் அதன் terms and conditions ஐ படித்து பாருங்கள்… நீங்கள் அந்த மொபைலை பயன்படுத்த ஆரம்பிக்கும்போதே உங்களது தகவல்களை ஜியோ நிறுவனம் எடுத்துக்கொள்ள சம்மதிக்கிறீர்கள் என்று அதில் உள்ளது.
ஜியோ மொபைல் மற்றும் மென்பொருளானது குக்கீஸ் என்று சொல்லக்கூடிய உளவு மென்பொருள் அடங்கியது. இதை ஜியோ நிறுவனம் தவறாக பயன்படுத்தாது என்றபோதிலும், அவர்கள் நினைத்தால் உங்களது செல்போனில் செய்யப்படும் அனைத்து செயல்பாடுகளையும் கண்காணிக்கவோ ஆவணங்களை நகலெடுக்கவோ அவர்களால் முடியும். அதனால் உங்களது ரகசியங்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியே..
உங்களது போனில் ஜியோ சிம்மை ஒரு முறை பயன்படுத்தினாலேயே உங்களது கீழ்கண்ட தகவல்களை அவர்கள் எடுத்து விடுவார்கள். IMEI NUMBER, OTHER NETWORK SIM NUMBER, இதுமட்டுமல்லாது இனிமேல் அந்த மொபைலில் பயன்படுத்தப்படும் அனைத்து சிம்கார்டுகளின் விவரங்களையும் அவர்களால் எடுக்க முடியும்.
நீங்கள் DND ஆக்டிவேட் செய்து வைத்திருப்பதை புத்திசாலித்தனமாக நினைக்கலாம். ஆனால் மார்கெட்டிங் கம்பெனிகள் அதற்கும் பல குறுக்கு வழிகளை கண்டுபிடித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் அவர்கள் பார்வையில் இருந்து தப்பவே முடியாது.
எக்காரணத்தைக்கொண்டும் ஜியோ எண்ணை அலுவலகம் சம்பந்தப்பட்ட வங்கி, காப்பீடு, எரிவாயு இணைப்பு போன்றவற்றிற்கு அளிக்காதீர்கள். ஏனெனில் ஜியோவில் ஏதாவது அசவுகரியம் ஏற்பட்டாலோ அல்லது ஜியோவின் சேவை பிடிக்காமல் போனாலோ அவ்வளவு எளிதாக நீங்கள் வேறு நிறுவனத்திற்கு மாற முடியாது.
ஜியோ சிம்மை மட்டுமே பயன்படுத்திக்கொண்டு உங்களது முந்தைய நிரந்தர மற்றும் அலுவலகங்கள் சம்பந்தப்பட்ட எண்ணை பயன்படுத்தாமல் இருந்தால் அந்த இணைப்பு துண்டிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. அதன் பின்னர் அதே எண்ணை வாங்க சிரமப்பட வேண்டியிருக்கும்.
இப்படி பலதரப்பட்ட சூழ்ச்சிகளோடு களமிறங்கியிருக்கிறது ஜியோ. எச்சரிக்கையாக இருக்க வேண்டியது நமது கடமை.
ஜியோ சிம் பயன்படுத்துகிறீங்களா? காத்திருக்கிறது மிகப்பெரிய ஆபத்து! உஷார்!
Reviewed by மறத்தமிழன்
on
February 22, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 22, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.