February 26, 2017
பாலைவனமாவதை தடுக்க, ஹைட்ரோ கார்பனை எதிர்ப்போம், தேசதுரோகி என்றாலும் ஏற்போம் : இயக்குனா் பரபரப்பு!
தமிழக மக்களின் பாரம்பரிய விளையாட்டாக மதிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு தடை விதித்த மத்திய அரசை கண்டித்து இளைஞர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என அனைவரும் போராடினார்கள்.
விளைவு அரசு அவசர சட்டம் கொண்டு வந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தியது. அப்போது பல இளைஞா்கள் மாணவர்கள், ஐடி ஊழியா்கள் , என அனைத்து தரப்பு மக்களும் போராடினா்.
தற்போது மீண்டும் ஹைட்ரோகார்பன் திட்டம் தடை செய்ய வேண்டும் என்று, புதுக்கோட்டையில் ஒட்டு மொத்த விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்று கூடி இந்த திட்டத்தை கொண்டு வர கூடாது என்று அறவழியில் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல இயக்குனரான பாண்டிராஜ் நெடுவாசலில் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பவர்கள் தேச துரோகிகள் என எச்.ராஜா கூறியுள்ளார்.
என்னுடைய நாட்டையும் , விவசாயத்தையும் மீட்க ஹைட்ரோகார்பன் திட்டத்தை நான் எதிர்ப்பதால் தேச துரோகியாக இருப்பதற்கு பெருமை படுகிறேன் .
ஹைட்ரோகார்பன் திட்டத்தை இங்கு கொண்டு வருவதன் மூலம் எங்கள் மக்களில் விவசாயம் முற்றிலும் பாதிக்கும். எங்களுக்கு சோறு போடும் பூமியை சேதப்படுத்த விட மாட்டோம். மேலும் இவர்கள் இந்த திட்டத்தை கொண்டு வர நினைத்தால் மீண்டும் ஒட்டு மொத்த மாணவர்களும் ஐடி இளைஞா்களும் கூடுவார்கள் என கூறியுள்ளார் .
பாலைவனமாவதை தடுக்க, ஹைட்ரோ கார்பனை எதிர்ப்போம், தேசதுரோகி என்றாலும் ஏற்போம் : இயக்குனா் பரபரப்பு!
Reviewed by மறத்தமிழன்
on
February 26, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 26, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.