Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 26, 2017

இந்துத்துவா அமைப்புகளின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன்: கேரள முதல்வர் பினராயி விஜயன் மங்களூருவில் ஆவேசம்


கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்துத்துவா அமைப்புகளின் எதிர்ப்பை மீறி நேற்று மங்களூரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்துத்துவா அமைப்புகளின் மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் என அவர் அறைகூவல் விடுத்தார்.
கர்நாடக மாநிலம், மங்களூரு வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க பேரணி நேற்று நடை பெற்றது. இதில் சிறப்பு விருந்தின ராக கேரள முதல்வரும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயன் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கேரளாவில் கடந்த ஆண்டில் மட்டும் இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் இதை கேரள அரசு தடுக்காமல் ஊக்குவிப்பதாவும் கூறி பினராயி விஜயனின் வருகைக்கு பாஜக, ஆர்எஸ்எஸ், விஷ்வ இந்து பரி‌ஷத், ராம் சேனா உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது வருகையை கண்டித்து மாவட்டம் முழுவதும் நேற்று முழுஅடைப்பு போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்தனர்.
இதையடுத்து மங்களூரு பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் முன்னெச்சரிக்கையாக 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மங்களூரு நேரு மைதானத்தில் நடைபெற்ற சமூக நல்லிணக்க பேரணி மாநாட்டில் பினராயி விஜயன் பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது, “தைரியம் இருந்தால் மங்களூரு வந்துபார் என இந்துத்துவா அமைப்பினர் மிரட்டினார்கள். அண்டை மாநில மக்கள் அன்புடன் அழைத்ததால் இங்கு தைரியமாக வந்துள்ளேன். நான் தலசேரி பிரினர் கல்லூரியில் படித்தவன். இந்துத்துவா அமைப்பினர் திரண்டிருந்த அந்த கல்லூரியில் சிறுவயதிலேயே தைரியமாக வலம் வந்தவன். இத்தகைய மிரட்டலுக்கு ஒரு போதும் அஞ்ச மாட்டேன். முதல் வராக இருப்பதால் மட்டுமல்ல, தனி ஆளாக கூட பினராயி விஜயனை யாராலும் தடுக்க முடியாது.
பாஜக ஆட்சியில் சிறுபான்மை யினரும், ஒடுக்கப்பட்டோரும், கம்யூனிஸ்ட்களும் அழிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். ” என்றார்.
மங்களூருவில் பதற்றம் 
பினராயி விஜயனின் வரு கையை கண்டித்து நடத்தப்பட்ட முழு அடைப்பு போராட்டத்தில் 12 பேருந்துகள் கல்வீசித் தாக்கப்பட்டன. 10-க்கும் மேற்பட்ட கடைகளும் கொளுத்தப்பட்டன. மேலும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இதனால் மங்களூருவில் நேற்று பதற்றம் நிலவியது.
மங்களூருவில் கேரள முதல்வருக்கு எதிராக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் கல்வீசித் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.