Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 17, 2017

நடராஜ் அறிவிப்பால் எடப்பாடி கூடாரத்திற்கு ஆபத்தா? பதவியே போனாலும் கவலையில்லை நடராஜ் !


கட்சித் தாவல் தடைச் சட்டப்படி எனது எம்.எல்.ஏ பதவியே பறி போனாலும் கூட எனக்குக் கவலை இல்லை என்று அதிரடியாக கூறியுள்ள நடராஜ் அறிவிப்பால், எடப்பாடி தரப்பில் மேலும் பலர் அணி மாறி வருவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முதல்வராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி தற்போது தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை கூட்டிக் காட்ட கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார். நேற்று பதவியேற்பு விழாவுக்கு வந்த எம்.எல்.ஏக்களை மீண்டும் கூவத்தூருக்கே கொண்டு போய் அடைத்துள்ளனர். அவர்களில் பலர் நேற்று சென்னைக்கு வரவே இல்லை. அவர்கள் அனைவருமே எடப்பாடியை ஏற்கவில்லை.

இதனால்தான் எடப்பாடி தரப்பு பெரும் பீதியில் உள்ளது. இருப்பவர்களையும் விட்டு விடக் கூடாது என்பதால்தான் மீண்டும் கூவத்துருக்கே கொண்டு போய் அடைத்து விட்டனர்.

இந்த பீதி காரணமாகத்தான் எடப்பாடி பெங்களூரு சிறைக்குக் கூட போகவில்லை. மாறாக இங்கேயே தங்கியிருக்கிறார். தனக்கு 124 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் பெரும்பான்மை பலம் கூட அவருக்கு இல்லை என்பதே உண்மை நிலரவம் என்று சொல்கிறார்கள்.

இந்த நிலையில்தான் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நடராஜ் எடப்பாடிக்கு எதிராக வெளியே வந்துள்ளார். இவரை தங்கள் பக்கம் இழுக்க ஓ.பி.எஸ் அணி தீவிரமாக முயன்று வந்தது. ஆனால் வெளிப்படையாக நடராஜ் பேசவில்லை. அமைதியாகவே இருந்து வந்தார்.

ஆனால் தற்போது வெளிப்படையாக எடப்பாடிக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ளார். இது கூவத்தூர் எம்.எல்.ஏக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனது பதவியே போனாலும் பரவாயில்லை, எடப்பாடியை ஆதரிக்க மாட்டேன் என்றும் அவர் அதிரடியாக கூறியுள்ளார். இது கூவத்தூர் கூடாரத்தில் குண்டு வீசலாம் என்ற எதிர்பார்ப்பில் ஓ.பி.எஸ் அணி உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.