Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 6, 2017

தேர்தல் ஆவணத்தில் ஜெ. சுய நினைவோடுதான் கை ரேகை பதிவு செய்தார்: அப்பல்லோ, லண்டன் டாக்டர்


உடல்நலம் தேறிவந்த போது ஜெயலலிதாவுக்கு திடீரென பின்னடைவு ஏற்பட்டது: லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே பேட்டி அளித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து பல்வேறு ன் வதந்திகள் நிலவுகின்றன. ஜெயலலிதா மரணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே செய்தியாளர் சந்திப்பு என மருத்துவர் ரிச்சர்ட் பீலே விளக்கம் அளித்தார். மேலும் மருத்துவ முறைகளுக்கு உட்பட்டே ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது எனவும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் ஜெயலலிதாவுக்கு கடுமையான சுவாச பிரச்சனை ஏற்பட்டு இருந்தது. மேலும் ஜெயலலிதாவின் ரத்தத்திலும் தொற்று ஏற்பட்டு இருந்தது. இதனால் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் போது பல்வேறு உறுப்புகள் செயலிழக்க தொடங்கின என்றும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே கூறினார். செப்சிஸ் போன்ற தோற்று ஓரிரு நாளில் திடீரென ஏற்பட வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு ஆகியவை ஜெயலலிதாவுக்கு இருந்ததால் செப்சிஸ் நோய் வேகமாக பரவியது. காய்ச்சலுக்காக ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போதே ஜெயலலிதாவுக்கு கடுமையான சர்க்கரை நோய், மற்றும் சிறுநீரக பாதிப்பு இருந்தது. இருப்பினும் தொடக்கத்தில் ஜெயலலிதா சுயநினைவுடனே இருந்ததாகவும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே கூறினார்.

இதனிடையே கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த லண்டன் மருத்துவர் நோயாளிகளை புகைப்படம் எடுத்து வெளியிடுவது வழக்கம் அல்ல எனத் தெரிவித்தார். இதேபோல் நான் சிகிச்சையை தொடங்கிய போது ஜெயலலிதா என்னிடம் பேசினார் எனவும் தெரிவித்தார். மேலும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல் 10 நாட்கள் விழிப்புடன் இருந்தார். உடல்நலம் தேறிவந்த போது ஜெயலலிதாவுக்கு திடீரென பின்னடைவு ஏற்பட்டது என்றும் ரிச்சர்ட் பீலே தெரிவித்தார். உயர்தர சிகிச்சைகள் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டது என அப்பல்லோ மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.

இதனிடையே கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அப்பல்லோ மருத்துவர் பிரபு அக்டோபர் 27ம் தேதி தேர்தல் வேட்புமனுவில் ஜெயலலிதா கைரேகை வைத்தார் எனத் தெரிவித்தார். ஜெயலலிதா கையெழுத்திடாத நிலையில் பெருவிரல் ரேகை வைத்தார் எனவும் மருத்துவர் பிரபு தெரிவித்தார்.

உடல் பதப்படுத்தப்பட்டது

இது குறித்து பதிலளித்த மருத்துவர் சுதா ஜெயலலிதா மரணமடைந்த பிறகு அவரது உடல் பதப்படுத்தப்பட்டது என்று தெரிவித்தார். டிசம்பர் 5ம் தேதி இரவு 12.20 மணியளவில் அவரது பதப்படுத்தப்பட்டது. மக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் பதப்படுத்தப்பட்டது எனவும் மருத்துவர் சுதா தெரிவித்தார். மேலும் உடலை பதப்படுத்த ஐந்தரை லிட்டர் திரவம் அவருக்குள் செலுத்தப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

கால்கள் அகற்றப்படவில்லை

ஜெயலலிதாவின் கால்கள் அகற்றப்படவில்லை என மருத்துவர் பாலாஜி தெரிவித்தார். மேலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையும் ஜெயலலிதாவுக்கு மேற்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

சிசிடிவி கேமரா இல்லை

ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அறையில் சிசிடிவி கேமரா இல்லை என மருத்துவர் ரிச்சர்டு பீலே தெரிவித்தார். சிசிடிவி கேமரா  இல்லாததால் சிகிச்சை பதிவுகளை வெளியிட முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

ஆளுநர் பார்த்தார்

ஜெயலலிதாவை அறையின் வெளியே உள்ள கண்ணாடி மூலம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் பார்த்தார் எனவும் மருத்துவர்கள் பதிலளித்தனர். அறைக்கு வெளியிலிருந்து சைகை மூலம் ஆளுநர் பேசினார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் இரண்டாவது முறை சென்ற போது ஆளுநர் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சசிகலா தகவல் தெரிவிக்கப்பட்டது

ஜெயலலிதாவுக்கு தரப்படும் சிகிச்சைகள் குறித்து சசிகலாவிடம் நாள்தோறும் தகவல் தெரிவிக்கப்பட்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் தலைமைச்செயலாளர், சுகாதாரத்துறை செயலாளரிடமும் ஜெயலலிதா சிகிச்சைகள் தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அரசு சார்பில் செய்தியாளர் சந்திப்பு

அரசு சார்பில் தான் செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே தெரிவித்தார்.

ஜெயலலிதாவுக்கு உடல் புண்

நீண்ட நாட்கள் படுக்கையில் இருந்ததால் ஜெயலலிதாவுக்கு உடல் புண் ஏற்பட்டது. 75 நாட்களாக படுக்கையில் இருந்ததால் அவருக்கு உடல் புண் ஏற்பட்டது என மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.

மாரடைப்பை கணிக்க இயலாது
மாரடைப்பு வருவதற்கான காரணத்தை கணிக்க இயலாது என மருத்துவர் பாபு தெரிவித்தார். மாரடைப்பு ஏற்பட்ட பிறகு சிறிது கூட இதயத்துடிப்பு இல்லாமல் ஜெயலலிதா உயிரிழந்தார் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் ஜெயலலிதாவை காப்பற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன என்றும் மருத்துவர் பாபு தெரிவித்தார். ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது மருத்துவர் ரமேஷ் அவரது அறையில் இருந்தார். மாரடைப்புக்கு அவரது அறையிலேயே எக்மோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சிகிச்சை செலவு ரூ.5.5 கோடி
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட செலவு ரூ.5.5 கோடி என மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் மருத்துவ கட்டணம் ரூ.5.5 கோடியை அவரது குடும்பத்தினர் செலுத்தினர் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.