Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 2, 2017

கள்ளக்காதலி வீட்டில் விஷம் குடித்த போலீஸ்காரர்.. ஆஸ்பத்திரியில் அனுமதி.. நா.....போலீஸ்ட்டா......


கோவை பீளமேடு அருகே சவுரிபாளையம் சாமியார் புதுவீதி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (34). பீளமேடு போலீஸ் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜென்சி என்ற மனைவியும், 8 வயது மகளும் உள்ளனர்.

இந்த நிலையில், சந்தோசுக்கும், புலியகுளம் அருகே உள்ள கணேசபுரம் பகுதியை சேர்ந்த நித்யா என்ற பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதனால் சந்தோஷ் மனைவி வீட்டுக்கு வராமல் கள்ளக்காதலி வீட்டிலேயே இருந்து வந்தார். இதனால் சந்தோசுக்கும் அவரது மனைவி ஜென்சிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து ஜென்சி தனது கள்ளக்காதல் குறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதனால் போலீசார் சந்தோசை வரவழைத்து விசாரித்து எச்சரித்தனர். சந்தோசும் தனது இனிமேல் கள்ளக்காதலி வீட்டுக்கு செல்ல மாட்டேன் என்று உறுதி அளித்து இருந்ததாக கூறப்படுகிறது.  சில நாட்கள் கழித்து சந்தோஷ் மீண்டும் கள்ளக்காதலி வீட்டிற்கு சென்று தங்கியிருந்துத வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு சந்தோஷ் கள்ளக்காதலி வீட்டிற்கு சென்றார். அங்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சந்தோஷ் திடீரென வீட்டில் இருந்த விஷத்தை குடித்தார். இதில் மயங்கி விழுந்த சந்தோசை பார்த்து நித்யா அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் அங்கிருந்தால் பிரச்னை வரும் என கருதி நித்யா தலைமறைவாகி விட்டார். இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.