February 21, 2017
ஒபிஎஸ், தீபா இணைந்து மக்களை சந்திக்க சுற்றுப்பயண திட்டம்!? சசி வட்டாரம் அதிர்ச்சி
சசிகலா குடும்ப ஆதிக்கத்திற்கு எதிராக, கட்சியினர் மற்றும் பொதுமக்களை திரட்ட, ஜெ., அண்ணன் மகள் தீபாவுடன் சேர்ந்து, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல முடிவு செய்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். எனினும், தன்னை எதிர்த்த பன்னீர்செல்வம், முதல்வராகி விடக்கூடாது என்பதற்காக, எம்.எல்.ஏக்களை அடைத்து வைத்து, தன் விசுவாசியான எடப்பாடி பழனிசாமியை, முதல்வராக்கி உள்ளார்.
அதை தொடர்ந்து, அரசுக்கு எதிராகவும், கட்சியை கைப்பற்றவும், கட்சி தொண்டர்களையும், மக்களையும் திரட்ட, பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார். அவருடன், ஜெ., அண்ணன் மகள் தீபா மற்றும் நிர்வாகிகள் உடன் செல்ல உள்ளனர்.
பயணத் திட்டத்தை வகுக்கும் பணியில், முன்னாள் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்திருப்பது, சசிகலா தரப்பினரிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒபிஎஸ், தீபா இணைந்து மக்களை சந்திக்க சுற்றுப்பயண திட்டம்!? சசி வட்டாரம் அதிர்ச்சி
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 21, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 21, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.