பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவான மதுசூதனன் இவ்வாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் அதிமுக பொதுக்குழுவை கூட்டி சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். ஆனால் அனைத்து தொண்டர்களும் வாக்களித்துதான் பொதுச்செயலரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது விதிமுறை என்பதால் இந்த நியமனம் செல்லாது என அறிவிக்க கூறி ஏற்கனவே பன்னீர்செல்வம் தரப்பினர் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.
மேலும், சசிகலாவால் கட்சியின் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி தினகரன் நியமனமும் செல்லாது என மதுசூதனன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து விரட்டிவிடப்பட்ட, சசிகலாவின் உறவினர் வெங்கடேஷ் கட்சியில் மீண்டும் சேர்த்தார் சசிகலா. அந்த நியமனத்தையும் ரத்து செய்வதாக மதுசூதனன் அறிவித்துள்ளார்.
மதுசூதனனை அவைத்தலைவர் பதவி மட்டுமின்றி, அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் கூட சமீபத்தில் சசிகலா நீக்கியிருந்தார். இந்த நிலையில் மதுசூதனன் இவ்வாறு அறிவிப்பை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தொண்டர்கள் மத்தியில் எது உண்மையான அதிமுக என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.