Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 18, 2017

சட்டசபைக்குள் தர்ணா செய்த ஸ்டாலின் குண்டுக்கட்டாக வெளியேற்றம்


சட்டசபையில் இருந்து வெளியேற மறுத்து தரையில் அமர்ந்து எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வலுக்கட்டாயமாக ஸ்டாலின் வெளியேற்றப்பட்டார்.

அவைக்கு குந்தகம் விளைவித்தாக கூறி திமுக எம்எல்ஏக்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். ஆனால் சட்டசபையில் இருந்து வெளியேற மறுத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எடப்பாடி பழனிச்சாமி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பை
முன்மொழிய சபாநாயகர் முயன்றபோது அதை திமுகவினர் தடுத்தனர். ரகசிய வாக்கெடுப்பு தேவை என கோரி பெரும் அமளியில் ஈடுபட்டனர். மேஜை, நாற்காலிகள் உடைந்தன. சபாநாயகர் தள்ளுமுள்ளுவிற்கு உள்ளானார். இதனையடுத்து அவை 1 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

அவை மீண்டும் கூடிய உடன் தனபால் தனக்கு நேர்ந்த துன்பத்தைக்கூறி வேதனையுடன் பேசினார். திமுக உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபடவே அவர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். சட்டசபையை 3 மணிவரை ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால். இரண்டாவது முறையாக சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவைக்காவலர்கள் திமுக உறுப்பினர்களை வெளியேற்ற முயற்சி செய்தனர். ஆனால் பலரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் 20 எம்எல்ஏக்களை அவைக்காவலர்கள் வெளியேற்றினர். ஆனால் அவையில் இருந்து வெளியேற மறுத்து எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் சட்டசபையில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஸ்டாலினை அவைக்காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.