Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 13, 2017

சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு


ஜெயலலிதா,சசிகலா, இளவரசி, சுதாகரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம். நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவராய் ஆகியோர் தீர்ப்பு வழங்குகின்றனர்.

ஜெயலலிதா 1991 முதல் 1996 வரை முதல்வராக இருந்தபோது 66 கோடி சொத்து சேர்த்ததாகவும், வருமானத்தை விட அதிகமாக ஜெயலலிதா சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையால்  வழக்கு தொடரப்பட்டது.  இந்த சொத்துக்குவிப்பு வழக்கில்  ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்மு றையீட்டில் கர்நாடக உயர்நீதிமன்றம் நீதிபதி குமாரசாமி, 4 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்தார். இந்த  உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.  இந்த மேல்முறையீட்டு விசாரணையில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.