February 14, 2017
திரையரங்குகளில் இசைக்கப்படும் தேசிய கீத இசைக்கு ரசிகர்கள் எழுந்து நிற்க அவசியமில்லை: உச்சநீதிமன்றம்
கடந்த ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி, ஷியாம் நாராயண் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவினால், திரையரங்குகளில் படங்கள் திரையிடப்படும் முன்பு தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், திரைப்படத்தின் இடையில் வரும் காட்சிகள் மற்றும் ஆவணப்படங்களிலும் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டாலும் எழுந்து நிற்கவேண்டுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி ஆகியோர் தெரிவித்த கருத்தில் படத்தின் காட்சிகள், செய்திப்படம் மற்றும் ஆவணப்படங்களில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது பார்வையாளர்கள் எழுந்து நிற்க அவசியமில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட வேண்டியுள்ளதால் இந்த வழக்கின் மறு விசாரணையை வரும் ஏப்ரல் மாதம் 18-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
திரையரங்குகளில் இசைக்கப்படும் தேசிய கீத இசைக்கு ரசிகர்கள் எழுந்து நிற்க அவசியமில்லை: உச்சநீதிமன்றம்
Reviewed by மறத்தமிழன்
on
February 14, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 14, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.