Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 17, 2017

பன்னீரை சந்திக்கிறார் மு.க. அழகிரி : அதிமுகவில் இணைகிறார் ? வைகோ ஐடியா !?


இனி திமுகவில் இணைய வாய்ப்பே இல்லை என்பதை கவலையுடன் ஒப்புக் கொண்ட முக அழகிரி அடுத்த கட்டம் என்ன என்று அக்கா செல்வியுடன் ஆலோசித்தார்.
செல்வியோ ஸ்டாலின் யார் பேச்சையும்  கேட்பதாக இல்லை. என்னிடமே பேச்சைக் குறைத்துக் கொண்டார் என்று கண்கலங்க கூறினாராம்.
இதனிடையே சிவகாசி செல்லும் வழியில் மதுரையில் இரண்டு மணி நேரம் தங்கினார் வைகோ. இதை அறிந்த அழகிரி பாண்டியன் ஹோட்டலில் போய் வைகோவைச் சந்தித்தார் என்கிறார்கள்.
அப்போது இனி திமுகவிற்கு எதிர்காலம் இல்லை. ஸ்டாலின் கட்சியை காப்பாற்ற மாட்டார். முதல்வர் பன்னீருக்கு பெரிய வரவேற்பும் மக்கள் அனுதாபமும் இருக்கிறது
உங்களுக்கும் பெரிய பதவிகள் அங்கு கிடைக்கும். எனவே பன்னீரை  சந்தியுங்கள் நானும் சொல்கிறேன் என்றாராம்.
தனது குடும்பத்தோடு ஆலோசித்த அழகிரி விரைவில் பன்னீரைச் சந்திப்பார். என்கிறது அந்த வார இதழ்.
இதெல்லாம் மீண்டும் திமுகவில் இணைவதற்கான ஐடியா தான் என்றும் சொல்கிறார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.