February 22, 2017
பொர்க்கிகளை குறிவைத்து சென்னையில் தீவிரவாதிகள் ஊடுருவல்: சுப்ரமணியன் சுவாமி டுவீட்டால் பரபரப்பு
'
'தமிழக பொர்க்கிகளை குறி வைத்து பாகிஸ்தான் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 6 பேர் சென்னைக்குள் நுழைந்து இருப்பதாக'' பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருப்பது தமிழக இளைஞர்கள் இடையே பெரிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவ்வப்போது விமர்சனங்களை எழுப்பி வரும் சுப்ரமணியன் சுவாமி சமீபத்தில் தமிழக இளைஞர்களை தாக்கி வருவது அதிகரித்து வருகிறது. இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், ''தமிழகத்தில் திமுகவுக்கு மாற்றுக்கட்சியாக பாஜக தலையெடுக்கும் வரை, இந்து அமைப்பு போராளிகளான எங்களுக்கு அதிமுகவை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. பாகிஸ்தான், ராஜஸ்தான் எல்லை வழியாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தீவிரவாதிகள் 6 பேர் சென்னைக்குள்
நுழைந்துள்ளனர். தமிழக பொர்க்கிகளை குறிவைத்து இவர்கள் சென்னைக்குள் நுழைந்துள்ளனர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.இவரது இந்தப் பதிவு தமிழக இளைஞர்கள் இடையே பெரிய கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. இவருக்கு எதிராக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்
ரகுராம் ராஜன் மீது குற்றச்சாட்டு:
சுப்ரமணியன் சுவாமி, துவக்கத்தில் ரிசர்வ வங்கியின் கவர்னராக இருந்த ரகுராம் ராஜனை மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்து இருந்தார். இந்த விஷயத்தில் பிரதமரே தலையிட்டு, இதுபோன்று தலைவர்கள் பேசக் கூடாது என்று சுவாமியை மறைமுகமாக கண்டித்து இருந்தார்.
கமல் ஹாசன் மீது தாக்குதல்:
இதையடுத்து ஜல்லிக்கட்டு வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தபோது, அவர்களை பொர்க்கிகள் என்று விமர்சனம் செய்து இருந்தார். அப்போது, தமிழகமே இவருக்கு எதிராக திரும்பியது. இதற்கு நடிகர் கமல் ஹாசனும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கமல் ஹாசனை மிகவும் தரக்குறைவாக எலும்பு இல்லாதவர் என்று கூறியிருந்தார். இதற்கு கமல் அளித்திருந்த பதிலில், ''தமிழக மக்களே சுவாமியை பார்த்துக் கொள்வார்கள்'' என்று தெரிவித்து இருந்தார். இதற்குப் பின்னரும் கமலை மட்டுமின்றி பொதுவாக நடிகர்களை மோசமாக சுவாமி விமர்சனம் செய்து இருந்தார்.
பொர்க்கிகளை குறிவைத்து சென்னையில் தீவிரவாதிகள் ஊடுருவல்: சுப்ரமணியன் சுவாமி டுவீட்டால் பரபரப்பு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 22, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 22, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.