Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 17, 2017

மும்பையில் பிடித்த பாடலுக்கு ஆட மறுத்ததால் நண்பனைக் கொலை செய்தவர் கைது


மும்பையில், களியாட்ட நிகழ்வு ஒன்றில் நடனமாட மறுத்த தன் நண்பரைக் கொன்ற இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மும்பை, அந்தேரி பகுதியில் உள்ள களியாட்ட விடுதியொன்றுக்கு, காதலர் தினத்தன்று மதியம் ஜாதவ், ஸ்ரீவத்கர் ஆகிய நண்பர்கள் இருவர் சென்றுள்ளனர். அங்கு மது அருந்தியபடி களியாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாடல் ஒன்று ஒலிபரப்பப்பட்டது. அந்தப் பாடலுக்கு ஜாதவ்வை நடனமாடுமாறு ஸ்ரீவத்கர் கூறினார். ஆனால் அதற்கு ஜாதவ் மறுத்துவிட்டார். இருவரும் போதையில் இருந்ததால், இந்த விடயம் குறித்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாய்ப்பேச்சு முற்றி கைகலப்பாக மாறியது. உடனே அருகே இருந்தவர்கள் இடையில் புகுந்து இருவரையும் விலக்கிவிட முயற்சித்தனர். அப்போது, கோபத்தின் உச்சத்தில் இருந்த ஸ்ரீவத்கர் அருகே இருந்த மரக்கட்டையொன்றை எடுத்து ஜாதவ்வின் தலையில் பலமாக அடித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.