February 22, 2017
வீரப்பன் பற்றி புதிய திடுக்கிடும் தகவல் : சேலம் மாண்புமிகு செய்த துரோகம், பகீர்
சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிக்க ஈரோடு தொழிலதிபர் ஒருவரும் ,சேலம் இப்போதைய மாண்புமிகு ஒருவரும் தான் உதவியதாக அதிரடிப்படை தலைவராக இருந்த விஜயகுமார் வெளியிட இருக்கும் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க தொழிலதிபர் ஒருவர் உதவியதாகவும் கண் அறுவை சிகிச்சைக்கு வரச்செய்து உதவுவதாக ‘அந்த’ மாண்புமிகு ஒருவரும் ஏமாற்றி இருக்கிறார்கள்.
அதன் பின் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அதிரடிப்படைத் தலைவராக இருந்த விஜயகுமார் தம்முடைய புத்தகத்தில் எழுதியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
30 ஆண்டுகாலம் தமிழகம், கர்நாடகா, கேரள மாநிலங்களுக்கு சவாலாக விளங்கியவர் சந்தனக் கடத்தல் வீரப்பன்.
2004-ம் ஆண்டு சந்தனக் கடத்தல் வீரப்பனையும் அவரது கூட்டாளிகளையும் அதிரடிப்படை சுட்டுக் கொன்றதாக அறிவித்தது. ஆனால் வீரப்பன் உயிருடன் பிடித்து கொலை செய்யப்பட்டதாக சர்ச்சை தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் Veerappan: Chasing the Brigand என்ற தலைப்பில் அதிரடிப்படை தலைவராக இருந்த விஜயகுமார் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் வீரப்பன் பிடிபட்டதாக சொல்லப்படுவது குறித்து விஜயகுமார் எழுதியுள்ளதாவது:
ஈரோடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வீரப்பனுக்கு நெருக்கமானவராக இருந்தார். அந்த தொழிலதிபதிரை அதிரடிப்படை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. கூடவே ‘அந்த’ அப்போதைய அரசியல்வாதியையும் துணைக்கு சேர்த்தது.
அந்த அரசியல் வாதிதான் நிறைய வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளார். இலங்கையில் இருந்து ஆயுதங்கள் பெற்றுத்தரப்படும் என முதலில் வீரப்பனுக்கு உறுதிமொழி தரப்பட்டது.
அத்துடன் வீரப்பனுக்கு திருச்சி அல்லது மதுரையில் கண் அறுவை சிகிச்சை செய்ய உதவுவதாகவும் வாக்குறுதி அளிக்கப்பட்டது.வெளியே வரவழைத்து சுட்டுக் கொலை செய்து என்கவுண்டர் செய்யப்பட்டதாக கூறினார்கள்.
பொதுவாக வீரப்பனை சந்திக்க செல்வோர் அந்த தொழிலதிபரிடம் இருந்து கிழிக்கப்பட்ட லாட்டரி சீட்டின் ஒரு பகுதியை வாங்கிச் செல்வர்.
அதைப் பார்த்துதான் வீரப்பன் நம்பிக்கைக்குரிய நபர் என சந்திக்கவே ஒப்புக் கொள்வார்.
இதையும் அதிரடிப்படை கண்டுபிடித்து வீரப்பனை காட்டை விட்டு வெளியேவரச் செய்து சுட்டுக் கொன்றது.
இவ்வாறு விஜயகுமார் தம்முடைய புத்தகத்தில் எழுதியுள்ளார். எல்லாக் கரங்களிலும் ,உறவுகள், இனம், நட்பு இந்த மூன்றின் மூலம் தான் துரோகம் நடந்து கொண்டே இருக்கிறது. வரலாறு முழுக்க துரோகங்கள்
வீரப்பன் பற்றி புதிய திடுக்கிடும் தகவல் : சேலம் மாண்புமிகு செய்த துரோகம், பகீர்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 22, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 22, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.