February 23, 2017
சமூக வலைதளங்களில் அவதூறு.. சி.ஆர்.சரஸ்வதியை தொடர்ந்து கமிஷனர் ஆபீஸில் நடிகர் கருணாஸ் புகார்
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிமுக நடிகர் கருணாஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
நடிகரும் அதிமுக எம்எல்ஏவுமான கருணாஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார். அதில் தன்னை பற்றி சமூக வலைதளங்களிர் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஓபிஎஸ் அணி சசிகலா அணி என உடைந்ததை தொடர்ந்து பலர் ஓபிஎஸ் அணிக்கு மாறினர். அப்போது சசிகலா அணிக்கு ஆதரவு தெரிவித்தவர்களை பொதுமக்கள் சமூக வலைதளங்களில் சரமாரியாக வசைபாடினர்.
செல்போனுக்கும் தொடர்பு கொண்டு ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு கொடுக்குமாறு வலியுறுத்தினர். இதுதொடர்பாக சிஆர்.சரஸ்வதி உட்பட அதிமுக பிரபலங்கள் பலர் போலீசில் புகார் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் சசிகலா ஆதரவு எம்எல்ஏவான நடிகர் கருணாஸ் சென்னை போலீஸ் கமிஷனர் ஆபிஸில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் அவதூறு.. சி.ஆர்.சரஸ்வதியை தொடர்ந்து கமிஷனர் ஆபீஸில் நடிகர் கருணாஸ் புகார்
Reviewed by மறத்தமிழன்
on
February 23, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 23, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.