Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 9, 2017

சசிகலா ஆதரவு சென்னை போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் மாற்றம்? முதல்வர் ஓபிஎஸ் உத்தரவு?


சசிகலா ஆதரவாளராக சந்தேகிக்கப்படும் சென்னை போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் மாற்றப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

முதல்வராக துடிக்கும் சசிகலா ஆதரவாளராக சந்தேகிக்கப்படும் ஜார்ஜ், சென்னை போலீஸ் கமிஷ்னர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் இன்று காலை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இச்சந்திப்பின் போது சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ்ஜை மாற்ற முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

ஜார்ஜ்-க்கு பதிலாக சஞ்சய் அரோரா சென்னை போலீஸ் கமிஷ்னராக நியமிக்கப்பட்ட உள்ளதாகவும் தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மெரினா புரட்சியின் போது முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடியை கொடுக்கும் வகையில் சசிகலா கோஷ்டியின் உத்தரவின் பேரில் கமிஷ்னர் ஜார்ஜ்தான் கொடூர வன்முறைகளை கட்டவிழ்த்துவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

 தற்போது அசாதாரண சூழல் நிலவும் நிலையில் ஜார்ஜ் தொடர்ந்து கமிஷ்னராக நீடிப்பதை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விரும்பவில்லை என்பதால் அவர் உடனடியாக மாற்றப்படுகிறார் எனவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.