Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 14, 2017

சசிகலா மட்டுமா குற்றவாளி, ஜெயலலிதாவும் குற்றவாளிதான்! ஆட்சியை கலையுங்கள்! திருமாளவன்


சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

நான்கு பேருமே குற்றவாளிதான் என்று வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பை திருமாவளவன் வரவேற்றுள்ளார். மேலும், இந்த வழக்கின் தீர்ப்பு குறித்தும், அவருடைய கட்சியின் நிலைப்பாடு குறித்தும் திருமாவளவன் கூறியிருப்பதாவது:

சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை ஜுன் மாதம் முடிவடைந்தது. இந்திய அளவில் ஊழல்வாதிகள் அச்சப்படும் அளவில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. இதனை விசிக வரவேற்கிறது.

இந்தத் தீர்ப்பில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதே வேளையில் மறைந்த ஜெயலலிதா காலமாகிவிட்டதால் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜெயலலிதாவும் இதில் குற்றவாளிதான் என்பதை இந்த தீர்ப்பு உணர்த்துகிறது. கடந்த அதிமுக சட்டசபைத் தேர்தலில் மக்கள் வழங்கிய வாக்குகள் ஜெயலலிதாவிற்காக வழங்கப்பட்ட வாக்குகள்.

மக்கள் ஜெயலலிதாவிற்கு வழங்கிய வாக்குகளின் அடிப்படையில்தான் இங்கு ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஜெயலலிதாவும் குற்றவாளிதான் என்று தீர்ப்பு அமைந்திருப்பதால் தற்போதுள்ள ஆட்சி தொடருவதில் எந்த வகையிலும் நியாயம் இல்லை.

தற்போது சசிகலா தரப்பு, ஓபிஎஸ் தரப்பு என்று இரண்டு அணிகள் அதிமுகவில் உள்ளன. சசிகலா தண்டனை பெற்றுவிட்ட நிலையில், அவருக்கு ஆதரவு அளித்த பெரும்பாலோர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவளிக்க வாய்ப்பிருக்கிறது. என்றாலும் இவர் தனித்து ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை பெறுவாரா என்பது சந்தேகமாகவே உள்ளது.

விடுதலை சிறுத்தைகளை பொறுத்தவரை ஜெயலலிதாவும் குற்றவாளி என்று தீர்ப்பு அமைந்துவிட்டதால், அதிமுக ஆட்சியை கலைத்துவிட்டு, தேர்தல் மூலம் புதிய அரசு அமைய வேண்டும் என்று என்று திருமாவளவன் கூறியுள்ளார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.